அரசியல் செய்தி

தமிழ்நாடு

75வது சுதந்திர தின நினைவு துாண் அமைக்க மேலும் 3 இடம் தேர்வு

Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:நாட்டின் 75வது சுதந்திர தின நினைவு துாண் அமைப்பதற்காக, மேலும் மூன்று இடங்களை பொதுப்பணி துறையினர் தேர்வு செய்துள்ளனர்.தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு விழா, நாட்டின் 75வது சுதந்திர தின நினைவு துாண் அடிக்கல் நாட்டு விழாவை ஒன்றாக நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜனாதிபதி ராம்நாத்

சென்னை:நாட்டின் 75வது சுதந்திர தின நினைவு துாண் அமைப்பதற்காக, மேலும் மூன்று இடங்களை பொதுப்பணி துறையினர் தேர்வு செய்துள்ளனர்.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு விழா, நாட்டின் 75வது சுதந்திர தின நினைவு துாண் அடிக்கல் நாட்டு விழாவை ஒன்றாக நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்ற ஜனாதிபதி, விரைவில் தேதி ஒதுக்க உள்ளார்.

இந்நிலையில், அவசர அவசரமாக நினைவு துாண் அமைப்பதற்கு, காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் அருகே இடம் தேர்வானது.பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் உத்தரவுப்படி, அந்த இடத்தில் ஒப்பந்த நிறுவனம், அடிக்கல் நாட்டு விழாவிற்கான முன்னேற்பாடுகளை அவசரகதியில் செய்து வந்தது. அந்த இடம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, அங்கு பணியை தொடர தொல்லியல் துறை அனுமதி தர மறுத்து விட்டது.

போர் நினைவு சின்னம் அருகே, மற்றொரு நினைவு சின்னம் அமைக்க, ராணுவமும் அதிருப்தி தெரிவித்தது.இதையடுத்து, விவேகானந்தர் இல்லம், சுவாமி சிவானந்தா சாலையை ஒட்டி இடங்கள் உட்பட, மூன்று இடங்களை பொதுப்பணி துறையினர் தேர்வு செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததும், அதில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

நினைவு துாண் அமைக்கும் விஷயத்தில், அரசுக்கு ஆரம்பத்திலேயே சறுக்கல் ஏற்பட்டு உள்ளதால், ஆளும் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202114:34:07 IST Report Abuse
vpurushothaman சுதந்திரக் கொள்கையிலேயே " சறுக்கல் " உள்ள கட்சிதானே .இது. தூணிலும் வெளிப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X