மறுமதிப்பீடை எதிர்த்து கார்த்தி மனு வருமான வரித்துறைக்கு உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மறுமதிப்பீடை எதிர்த்து கார்த்தி மனு வருமான வரித்துறைக்கு உத்தரவு

Added : ஜூலை 24, 2021
Share
சென்னை:வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து, பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க, வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி; சிவகங்கை தொகுதி எம்.பி.,யாக உள்ளார். சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள, 5.11 ஏக்கர் நிலத்தை, 2015ல், 'அக்னி

சென்னை:வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து, பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க, வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி; சிவகங்கை தொகுதி எம்.பி.,யாக உள்ளார். சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள, 5.11 ஏக்கர் நிலத்தை, 2015ல், 'அக்னி எஸ்டேட்ஸ்' என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தார்.ஒரு ஏக்கர், 3 கோடி ரூபாய் என, 15.33 கோடி ரூபாய்க்கான காசோலை பெற்றார்.

2014 - 15ம் ஆண்டில், 6.38 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டவில்லை என, வருமான வரித்துறை, மீண்டும் கணக்கை ஆய்வு செய்ய துவங்கியது.பின், '2014 - 15, 2015 - 16ம் ஆண்டு கணக்கில், 6.38 கோடி ரூபாயை, ஏன் வரி விதிப்புக்கு எடுத்து வரக்கூடாது' எனக் கேட்டு, கார்த்தி சிதம்பரத்துக்கும், அவரது மனைவி ஸ்ரீநிதிக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

'உரிய நடைமுறையை பின்பற்றி, மறுஆய்வு நடவடிக்கையை, வருமான வரித்துறை மேற்கொள்ளலாம்' என, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து, 2014 -15ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து, 3.86 கோடி ரூபாய் வரி மதிப்பீடு செய்து, இம்மாதம் 15ம் தேதி, வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு:தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தடை கோரியும், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்நிலையில், இரண்டு நாட்களில் பதில் அளிக்கும்படி, ஜூலை, 7ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.எனக்கு நியாயமான அவகாசம் வழங்கப்படவில்லை. அவசர கதியில் ஏழு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இயற்கை நீதிக்கு முரணாக, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 28ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X