அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி படம் திறப்பு : ஆக., 2ல் ஜனாதிபதி பங்கேற்பு

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை, ஆகஸ்ட் 2ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.முதல்வர் ஸ்டாலின், கடந்த 19ம் தேதி டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, சென்னை மாகாண சட்டசபை இயங்கத் துவங்கி, 100 ஆண்டுகள் ஆனதையொட்டி நடக்க உள்ள, நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கவும், சட்டசபையில், கருணாநிதி படத்தை
 கருணாநிதி படம் திறப்பு  ஆக., 2ல் ஜனாதிபதி பங்கேற்பு

சென்னை : தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை, ஆகஸ்ட் 2ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின், கடந்த 19ம் தேதி டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
அப்போது, சென்னை மாகாண சட்டசபை இயங்கத் துவங்கி, 100 ஆண்டுகள் ஆனதையொட்டி நடக்க உள்ள, நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கவும், சட்டசபையில், கருணாநிதி படத்தை திறந்து வைக்கவும் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, விழாவிற்கு வர, ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.


latest tamil news




இதுகுறித்து, சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டி: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா ஆக., 2ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, சட்டசபை வளாகத்தில் நடக்க உள்ளது. விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், விழாவிற்கு தலைமை வகிக்கவும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கவும், இசைவு தந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202112:33:29 IST Report Abuse
 rajan மோடியின் கட்டளை
Rate this:
Cancel
Suresh Kumar - Salem,இந்தியா
25-ஜூலை-202111:28:35 IST Report Abuse
Suresh Kumar திரு.கருணாநிதி அவர்கள் நாட்டுக்காக, நம் மக்களுக்காக என்ன செய்தார். இவரைபோன்றவர்களை மக்கள் மறந்துவிடுவதே நல்லது.
Rate this:
Cancel
25-ஜூலை-202110:10:29 IST Report Abuse
ருத்ரா தாங்கள் தமிழகம் வருவது மட்டும் மட்டற்ற மகிழ்ச்சி ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X