சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

உஷாரய்யா உஷாரு...!

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
உஷாரய்யா உஷாரு...!'இவர் நல்லவரா, கெட்டவரா; இவரை நம்புவதா, வேண்டாமா...' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் பல ஆண்டுகளாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து
உஷாரய்யா உஷாரு...!


உஷாரய்யா உஷாரு...!



'இவர் நல்லவரா, கெட்டவரா; இவரை நம்புவதா, வேண்டாமா...' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் பல ஆண்டுகளாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அடுத்த லோக்சபா தேர்தலுக்காக இப்போதே தயாராகி வருகிறார் சரத் பவார். பா.ஜ.,வுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாக பேச்சு அடிபட்டது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார் சரத் பவார். காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலையும் சந்தித்துப் பேசினார். திடீரென சமீபத்தில் சரத் பவாரின் நடவடிக்கைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. டில்லி சென்ற அவர், பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ், திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'இவரை நம்பி எந்த ரகசியத்தையும் பேச முடியாது போலிருக்கிறதே. எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என கண்டுபிடிக்கவே முடியவில்லை. இவரிடம் சற்று உஷாராகத் தான் இருக்க வேண்டும்' என, முணு முணுக்கின்றனர்.


எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை!



'அரசியலில் எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; அதற்காக யாரையும் பகைக்கக் கூடாது என்பது இவர்கள் விஷயத்தில் உண்மையாகி விட்டது' என, மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, பா.ஜ., லோக்சபா எம்.பி.,யான கே.பி.சிங் ஆகியோரை பற்றி பேசுகின்றனர் சக அரசியல்வாதிகள். ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். மத்திய பிரதேசத்தில் செல்வாக்கான அரசியல்வாதி. இவரது தீவிர விசுவாசிகளில் ஒருவராக, நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர் கே.பி.சிங்.கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், சிந்தியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பா.ஜ.,வில் ஐக்கியமானார் சிங். குணா லோக்சபா தொகுதியில் தன் குருநாதர் சிந்தியாவை எதிர்த்து போட்டியிட்டதுடன், அவரை தோற்கடிக்கவும் செய்தார்.இதனால் கே.பி.சிங் மீது கடும் கோபத்தில் இருந்தார் சிந்தியா. காலச்சக்கரம் வேகமாக சுழலவே, சிந்தியாவும் காங்கிரசுக்கு முழுக்கு போட்டு பா.ஜ.,வில் ஐக்கியமானார்.

இவருக்கு சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற பின், மத்திய பிரதேசத்துக்கு வந்த சிந்தியாவை முதலில் வரவேற்றது யார் தெரியுமா; கே.பி.சிங் தான். சிந்தியாவும் பகையை மறந்து, அவரை வரவேற்றார். பிரிந்தவர் கூடினால் என்ன நடக்கும்; இருவரும் மணிக்கணக்காக பல விஷயங்களை மனம் விட்டுப் பேசினர்; பிரிந்த நட்பு, மீண்டும் துளிர்த்தது. இதை பார்த்த ம.பி., மாநில அரசியல்வாதிகள், 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை என்பது உண்மை தான் போலிருக்கிறது' என்கின்றனர்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X