ஐ.என்.எக்ஸ்.,மீடியா வழக்கு: அமலாக்கத்துறைக்கு டில்லி ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : ஐ.என்.எக்ஸ்.,மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு டில்லி உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம் 2007ல் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ்., மீடியா குழுமம் 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற, முறைகேடாக அனுமதி அளித்ததாக
 அமலாக்கத்துறை,  டில்லி ஐகோர்ட் 'நோட்டீஸ்'

புதுடில்லி : ஐ.என்.எக்ஸ்.,மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு டில்லி உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம் 2007ல் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ்., மீடியா குழுமம் 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற, முறைகேடாக அனுமதி அளித்ததாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.


latest tamil news




இத்துடன் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சிதம்பரம் மீது அமலாக்கத் துறையும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த இரு வழக்குகளிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளார்.
இந்நிலையில் சிதம்பரம் சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை நகலுடன், வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிலவற்றை வழங்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
வழக்கு ஆவணத்தின் பக்க எண்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும், நடுவில் காணாமல் போன சில பக்கங்களை வழங்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் இது குறித்து ஆக., 9க்குள் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
25-ஜூலை-202110:29:39 IST Report Abuse
suresh kumar ஆவணங்கள் பெற்று இத்தனை மாதங்கள் கழித்துதான் பக்க எண்களை சரி பார்க்கிறார்களா? எதற்கும் கால நிர்ணயம் இல்லையா? இந்த வேகத்தில் போனால், எப்படியும் 200210 ஆம் ஆண்டு விசாரணை துவங்கிவிடும்
Rate this:
Cancel
25-ஜூலை-202110:07:24 IST Report Abuse
அருணா நடுவில் காணாமல் போன பக்கங்கள் சிக்கி விட்டதா?
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
25-ஜூலை-202110:00:24 IST Report Abuse
Nagarajan D இவனை உள்ளே போட்டு வெளியே விடவே கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X