விண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..!

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன் டிசி: அமெரிக்க தொழில் ஜாம்பவான்கள் ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் முன்னதாக விண்வெளிக்குச் சென்று திரும்பினர். விண்வெளி சுற்றுலாவுக்கு இவர்களது நிறுவனம் தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த பயணம் அமைந்தது. உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவதியுறும் நிலையில் இவர்களது இந்த பயணம் சர்வதேச கவனத்தைப் பெற்றது

வாஷிங்டன் டிசி: அமெரிக்க தொழில் ஜாம்பவான்கள் ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் முன்னதாக விண்வெளிக்குச் சென்று திரும்பினர். விண்வெளி சுற்றுலாவுக்கு இவர்களது நிறுவனம் தயாராகி வருகிறது.



latest tamil news



இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த பயணம் அமைந்தது. உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவதியுறும் நிலையில் இவர்களது இந்த பயணம் சர்வதேச கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்களை அஸ்ட்ராநாட்கள் என இணையத்தில் பலர் அழைக்கத் துவங்கினர். விண்வெளி சுற்றுலா செல்பவர்கள் கமர்சியல் அஸ்ட்ராநாட்கள் என்று இணையத்தில் பலரால் அழைக்கப்பட்டனர்.

விண்வெளி வீரர் என்ற வார்த்தையை குறிக்கும் ஆங்கிலச் சொல் அஸ்ட்ராநாட். ஒருவர் விண்வெளி வீரராக பல கட்ட பயிற்சிகளை முடித்து பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுத் தேறவேண்டியது அவசியம். அதற்கு உடற்தகுதி, மனவலிமை, உயிருக்கு அஞ்சாத தைரியம் உள்ளிட்ட அம்சங்கள் வேண்டும்.

ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின்முதல் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்வரை உலகம் பல விண்வெளி வீரர்களின் சாகசத்தை கண்டுள்ளது. கல்பனா சாவ்லா உள்ளிட்ட பல விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பாமல் உயிர்த்தியாகம் செய்தது வரலாறு.


latest tamil news



விண்வெளி வீரர் என்கிற அந்தஸ்தை பெறுவது சுலபமான காரியம் அல்ல. செல்வந்தர்கள் விண்வெளி சுற்றுலாவுக்கு செல்வதால் இவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிட மாட்டார்கள் என என்ற கருத்து பரவலாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு கருத்து வெளியிட்டது.

பொழுதுபோக்குக்காக விண்வெளிக்குச் செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது என்று கட்டாயமாகத் தெரிவித்துள்ளது. சுற்றுலா செல்பவர்கள் விண்வெளிக்கு சென்றாலும் சுற்றுலா பயணிகள்தான். அவர்களால் விண்வெளி வீரர்கள் ஆக முடியாது.

இவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைப்பதன் மூலமாக எதிர்கால சந்ததியினருக்கு உண்மையான விண்வெளி வீரர்களின் அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடும். ஆகவே ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட தொழிலதிபர்களை அஸ்ட்ராநாட்கள் என்று அழைக்கக்கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-ஜூலை-202111:11:14 IST Report Abuse
S.Baliah Seer உண்மைதான்.பிஎச்டி -வாங்கியவர்கள் அறிவாளிகளாக ஆக முடியாது. அதுபோல் DSc போன்ற பட்டங்கள் பெற்றவர்களும் விஞ்ஞானிகளாக முடியாது.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-ஜூலை-202106:56:27 IST Report Abuse
Sanny இவர் சொல்வதும் உண்மை இருக்கு, வருங்கால சந்ததியினர் நம்ம தவறாக நினைக்கக்கூடாது, விமானத்தில் செல்பவர்கள் விமானி என்று சொல்லக்கூடாது என்ற கருத்தையும் மறைமுகமாக வைக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X