சமூக வலைதளங்களில் புகார் மின் வாரியம் துரித நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் புகார் மின் வாரியம் துரித நடவடிக்கை

Added : ஜூலை 24, 2021
Share
சென்னை:அனைவரும் பார்ப்பதால், சமூக வலைதளங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது, மின் வாரியம் துரிதகதியில் நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதால், மின் தடை ஏற்படுகிறது. கூடுதல் மின் கட்டணம்வசூல், புதிய மின் இணைப்பு வழங்க தாமதம், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம், மின் இணைப்பு

சென்னை:அனைவரும் பார்ப்பதால், சமூக வலைதளங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது, மின் வாரியம் துரிதகதியில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதால், மின் தடை ஏற்படுகிறது. கூடுதல் மின் கட்டணம்வசூல், புதிய மின் இணைப்பு வழங்க தாமதம், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம், மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு அலைக்கழிப்பு என, மின் வாரிய சேவைகளால் பலரும் பாதிக்கின்றனர்.

அவை தொடர்பாக பாதிக்கப்படுவோர், மின் வாரிய அலுவலகங்களில் புகார் அளித்தாலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்போர், மின் வாரிய சேவைகளால் பாதிக்கப்படும் போது, தங்களுக்கு நேர்ந்த சிரமங்கள் குறித்து, கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனால், மக்களிடம் மின் வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, தடையில்லாமல் மின் வினியோகம் செய்ய, தங்கள் பகுதியில் மேற்கொள்ளப் படும் மின் திட்ட பணிகள்.மின் சாதனங்களின் பராமரிப்பு பணிகள் போன்றவற்றை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சமூக வலைதளங்களில் கணக்கு துவக்கி, அவற்றை புகைப்படத்துடன் பதிவிடுமாறு, 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும், மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, அனைத்து அலுவலகங்களின், சமூக வலைதள கணக்குகளில், தங்கள் பகுதியில் நடக்கும் மின் பணிகள் பதிவிடப்படுகின்றன.

பலரும் வலைதளங்களில் தங்கள் பகுதியில் சேதமடைந்த சாதனங்களை புகைப்படம் எடுத்து, புகாராக பதிவிடுகின்றனர்.மேலும் சேவை தரத்தை மேம்படுத்த, ஆலோசனை களையும் வழங்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் என, அனைவரும் கணக்கு வைத்து உள்ளனர். இதனால் சமூக வலைதளத்தில் அளிக்கப்படும் புகார்கள் மீது, மின் வாரியம் துரிதகதியில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X