பொது செய்தி

தமிழ்நாடு

18 ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
கூடலுார்--பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் லோயர்கேம்ப் 18 ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை வழியாக போடி வரை செல்லும் 18 ம் கால்வாய் மூலம் 54 குளங்களில் தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் பெருகும் வகையில் உள்ளது. தற்போது வைகை அணை நீர்மட்டம் 68.50

கூடலுார்--பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் லோயர்கேம்ப் 18 ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை வழியாக போடி வரை செல்லும் 18 ம் கால்வாய் மூலம் 54 குளங்களில் தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் பெருகும் வகையில் உள்ளது. தற்போது வைகை அணை நீர்மட்டம் 68.50 அடி(மொத்த உயரம் 71 அடி)என நிரம்பும் நிலையில் உள்ளதாலும் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்து 134.50 அடியாக உள்ளதாலும்(மொத்த உயரம் 152 அடி) லோயர்கேம்ப் 18 ம் கால்வாயில் பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.18ம் கால்வாய் விவசாய சங்க கவுரவத்தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் கூறியதாவது: சுருளி அருவி, சுரங்கனாறு நீர்வீழ்ச்சி, சுருளியாறு மின்நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர், பெரியாறு அணையில் திறக்கப்படும் 900 கன அடிநீரும் சேர்ந்து வைகை அணையை அடைகிறது. மேலும் மூல வைகை, கொட்டக்குடி ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீரும் வைகைக்கு போய் சேருகிறது. வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18 ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X