பொது செய்தி

இந்தியா

இந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தோனிசியாவுக்கு கொரோனா நிவாரண உதவியாக இந்தியா 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது. டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இதனால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை

புதுடில்லி: இந்தோனிசியாவுக்கு கொரோனா நிவாரண உதவியாக இந்தியா 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.



latest tamil news



இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது. டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதனால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கார் பார்க்கிங்கில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்தியா உட்பட பல நாடுகளிடம் இந்தோனேசியா உதவி கோரியுள்ளது. இதனையடுத்து இந்தியா சார்பில், கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் இந்தோனேசியாவுக்கு ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.


latest tamil news


இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல், கொரோனா நிவாரண உதவிகளுடன் இந்தோனேசியாவின் ஜகார்தா துறைமுகத்தை இன்று சென்றடைந்தது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தோனேசியாவிற்கு 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 செறிவூட்டிகளை இந்தக் கப்பல் கொண்டு சென்றுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நிவாரண உதவிகளை அளிக்கும் பணிகளிலும் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202114:11:39 IST Report Abuse
Kasimani Baskaran இந்தோனேசியா வெகுவாக சிறமப்படுகிறார்கள். உதவுவது நமது கடமை.
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
25-ஜூலை-202111:37:31 IST Report Abuse
sankar நல்ல விஷயம் , இந்த மாதிரி நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதைவி செய்வது , நட்புறவை மேம்படுத்தும் .
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202106:44:56 IST Report Abuse
Vijayan Singapore இந்தோனேசியாவுக்கு உதவுவது நம்முடைய கடமை, வாழ்க மோடிஜி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X