பொது செய்தி

இந்தியா

பாக்., 'ட்ரோன்' தாக்குதல் இந்தியா கடும் கண்டனம்

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக, பாக்.,கிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் அருகே சர்வதேச எல்லையில் உள்ள சுசெட்கர் பகுதியில், இந்தியா -பாக்., எல்லை பாதுகாப்பு படை கமாண்டர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.இது குறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர்

ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக, பாக்.,கிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



ஜம்மு - காஷ்மீர் அருகே சர்வதேச எல்லையில் உள்ள சுசெட்கர் பகுதியில், இந்தியா -பாக்., எல்லை பாதுகாப்பு படை கமாண்டர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.இது குறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:முதன் முறையாக இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகளின் கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சு நடந்தது.

இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., சுர்ஜித் சிங் மற்றும் பாக்., ரேஞ்சர்சின் சியால்கோட் கமாண்டர் முரத் உசேன் பங்கேற்றனர். அப்போது சமீபத்தில் ஜம்மு விமானப் படை தளத்தில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள், எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.


latest tamil news



இரு தரப்பு கமாண்டர்கள் இடையே எந்தவொரு பிரச்னை குறித்தும் உடனடியாக தகவல்களை பரிமாறி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. சர்வதேச எல்லையில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை தொடர்ந்து பராமரிக்க இரு தரப்பும் முடிவு செய்தன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
25-ஜூலை-202108:20:08 IST Report Abuse
கௌடில்யன் இஸ்லாமிய நாடுகள் தங்கள் பக்கம் நியாயம் இல்லாதபோது பணிந்து போவது போல் நடந்து கொள்வார்கள் ...நீங்கள் அவர்களை நம்பி சற்று கவன குறைவாக இருக்கும்போது தாக்குதல் நடத்துவார்கள் ...சவுதி அரேபிய சரித்திரத்தை படித்தவர்களுக்கு புரியும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X