டில்லியில் தளர்வுகள் அறிவிப்பு: நாளை முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லியில் தளர்வுகள் அறிவிப்பு: நாளை முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021
Share
புதுடில்லி-டில்லியில் நாளை முதல் தியேட்டர்கள், 'ஸ்பா' உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும் கடந்த சில வாரங்களாக வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து

புதுடில்லி-டில்லியில் நாளை முதல் தியேட்டர்கள், 'ஸ்பா' உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



latest tamil news



டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும் கடந்த சில வாரங்களாக வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் புதிய தளர்வுகளை டில்லி அரசு நேற்று அறிவித்தது. இந்த புதிய தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.


latest tamil news


இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை கருத்தில் வைத்து புதிய தளர்வுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நாளை முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. காலை 5:00 மணி முதல், தியேட்டர்கள், ஸ்பா உள்ளிட்டவை 50 சதவீதம் பேருடன் செயல்பட அனுமதிக்கப் படுகிறது.மெட்ரோ ரயில்களை 100 சதவீத பயணியருடன் இயக்கலாம். சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை காலை 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை இயங்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X