ராஜஸ்தான் அமைச்சரவை அடுத்த வாரத்தில் மாற்றம்?..

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெய்ப்பூர்-கட்சியில் பிரச்னைகள் தீவிரமடைவதை தடுக்கும் வகையில் ராஜஸ்தானில் அமைச்சரவை மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றியமைக்க, காங்., திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் இளம் தலைவர் சச்சின் பைலட், கடந்தாண்டு ஜூலையில் திடீரென போர்க்கொடி துாக்கினார்.

ஜெய்ப்பூர்-கட்சியில் பிரச்னைகள் தீவிரமடைவதை தடுக்கும் வகையில் ராஜஸ்தானில் அமைச்சரவை மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றியமைக்க, காங்., திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.



latest tamil news


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் இளம் தலைவர் சச்சின் பைலட், கடந்தாண்டு ஜூலையில் திடீரென போர்க்கொடி துாக்கினார். அவருக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து விலகியதால், காங்., ஆட்சியை இழந்தது. அது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க, பைலட்டுடன் பேச்சு நடத்தப்பட்டது.

துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை இழந்த சச்சின் பைலட் பொறுமை காத்து வந்தார். இந்நிலையில் 'ஏற்கனவே உறுதியளித்தபடி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, பைலட் தலைமையிலான அதிருப்தியாளர்கள் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது முதல்வர் உட்பட 21 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.


latest tamil news


மேலும் ஒன்பது பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும். அதிருப்தியாளர்களை சமாளிக்கும் வகையில் அமைச்சரவையை விரிவுபடுத்தவும், நிர்வாகிகளை மாற்றி அமைக்கவும் கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக விவாதிக்க பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால், வரும் வாரத்தில் ராஜஸ்தான் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூலை-202119:11:44 IST Report Abuse
Saravana Ramanathan PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜூலை-202109:50:12 IST Report Abuse
sankaseshan மாற்றமா தடு மாற்றமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X