பொது செய்தி

இந்தியா

துப்பாக்கி 'லைசென்ஸ்' முறைகேடு; 40 இடங்களில் சி.பி.ஐ., சோதனை

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் முறைகேடாக துப்பாக்கி 'லைசென்ஸ்' வழங்கிய வழக்கில், டில்லி உட்பட 40 இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனையை நேற்று துவங்கியது.ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களிலும்ஆயிரக்கணக்கானோருக்கு முறைகேடாக துப்பாக்கி 'லைசென்ஸ்' வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இரு வழக்குகளை சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர். விசாரணையில் ஜம்மு -

புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் முறைகேடாக துப்பாக்கி 'லைசென்ஸ்' வழங்கிய வழக்கில், டில்லி உட்பட 40 இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனையை நேற்று துவங்கியது.



latest tamil news



ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களிலும்ஆயிரக்கணக்கானோருக்கு முறைகேடாக துப்பாக்கி 'லைசென்ஸ்' வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இரு வழக்குகளை சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர். விசாரணையில் ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் தரப்பில், அம்மாநிலத்தில் வசிக்காதோருக்கும் போலி ஆவணங்கள் வாயிலாக துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டது தெரியவந்தது.


latest tamil news


இது தொடர்பாக ஸ்ரீநகர், ஜம்மு, நொய்டா, குர்கான் உட்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்புடைய இடங்களில் 2019ல் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.இந்த வழக்குகளில் அடுத்ததாக ஜம்மு, ஸ்ரீநகர், உதம்பூர், ரஜவுரி, அனந்த்நாக், பாரமுல்லா மாவட்டங்கள் மற்றும் டில்லியில், அரசு அதிகாரி களின் வீடுகள் உட்பட 40 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனைகளை துவங்கினர். ஐ.ஏ.ஏஸ்., அதிகாரிகள் ஷாஹித் இக்பால் சவுத்ரி மற்றும் நிராஜ் குமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடப்பதாக சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202107:50:12 IST Report Abuse
Kasimani Baskaran இந்திய தண்டனைச்சட்டம் செல்லுபடியாகாத அளவில் சிறப்பு அந்தஸ்த்து என்ற பெயரில் ஓவராக ஆடியிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X