பொது செய்தி

இந்தியா

ஆப்கனில் தலிபான்கள் ஆதிக்கம் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுரை

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எட்டு அம்சங்கள் அடங்கியஅறிவுரையை வழங்கிஉள்ளது.ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையடுத்து அங்கு தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மீணடும் அதிகரித்துள்ளது. கேள்விக்குறிஆப்கனில் 90 சதவீத பகுதிகளை

புதுடில்லி-தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எட்டு அம்சங்கள் அடங்கியஅறிவுரையை வழங்கிஉள்ளது.latest tamil newsஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையடுத்து அங்கு தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மீணடும் அதிகரித்துள்ளது. கேள்விக்குறிஆப்கனில் 90 சதவீத பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் அனைவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுஉள்ளது. இந்நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடர்பாக மத்திய அரசு எட்டு அம்சங்கள் அடங்கிய அறிவுரையை வழங்கிஉள்ளது.


latest tamil news


அதன் விபரம்: ஆப்கனில் உள்ள இந்தியர்கள் பணிபுரியும் இடத்திலும், தங்கியிருக்கும் இடத்திலும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.பணிக்கு செல்லும் போதும், பணி முடிந்து திரும்பும் போதும், மிகவும் கவனத்துடன் வர வேண்டும் சாலைகளில் செல்லும்போது எதிரே ராணுவம் அல்லது அரசு வாகனங்கள் வந்தால், அதிலிருந்து நன்கு விலகி செல்ல வேண்டும்.

ஏனெனில் ராணுவம் அல்லது அரசு வானங்களை குறி வைத்து தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லதுஅவசியம்ஆப்கனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய துாதரகத்தின் இணையதளத்தில் தங்கள் பெயர், தங்கியிருக்கும் இடம், பணி செய்யும் இடம் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும் ஆப்கனில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் இந்திய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ஆப்கன் நிலைமையை பார்வையிட்டு செய்தி சேரிக்கச் சென்றுள்ள இந்திய பத்திரிகையாளர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூலை-202108:54:38 IST Report Abuse
ramkumar These sort of groups and its allies will only initiate a Third World War. Totally anti human, anti cultural, anti social, fully lacks any good sense. They are destroyers basically.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X