ஆசிரியர்களுக்கு நாளை முதல் கணினி பயிற்சி..

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை-தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, நாளை முதல் துவங்க உள்ளது.'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை, சிறந்த முறையில் மேற்கொள்ள, அடிப்படை கம்ப்யூட்டரை கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல், 'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆகியவற்றில், திறன் வளர் பயிற்சி அளிக்க,

சென்னை-தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, நாளை முதல் துவங்க உள்ளது.latest tamil news


'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை, சிறந்த முறையில் மேற்கொள்ள, அடிப்படை கம்ப்யூட்டரை கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல், 'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆகியவற்றில், திறன் வளர் பயிற்சி அளிக்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பயிற்சிக்கு தேவையான வீடியோக்கள், மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை வைத்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

'கியூஆர்' குறியீடுமாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட, 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு, நாளை முதல் 30ம் தேதி வரை, ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக, மாவட்ட கருத்தாளர்களாக பயிற்சி எடுத்தவர்களை வைத்து, 2.10 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 2 முதல் பல்வேறு கட்டங்களில், ஐந்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


latest tamil news


இப்பயிற்சியால், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வர். புத்தகத்தில் உள்ள, 'கியூஆர்' குறியீடுகளில் உள்ள எண்ம வளங்களை பயன்படுத்தி கற்பித்தல், இணையதளத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி, பாடக் கருத்துகளை எளிதாக விளக்குதல் போன்றவற்றில் திறனடைவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
25-ஜூலை-202108:32:28 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN அரசு பள்ளி ஆசிரியர்களின் கணினி அறிவு தற்போது இவ்வளவு தானா? அதனால் தான் அரசு பள்ளி மாணவர்களிடம் திறன் குறைவு என்று கூறி போட்டி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். முதலில் சட்டியை நிரப்ப வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களின் பர்ஸ் தான் இவ்வளவு நாளும் நிரம்பி கொண்டு உள்ளது போலும். அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவான சம்பளம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள் போலும். குறையை ஆசிரியர்களிடம் வைத்துக்கொண்டு மாணவர்களின் அறிவுத்திறனை குறை சொல்லுவதை இனியாவது தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வியும் வேற்று மொழிகளை கற்க சுதந்திரம் கொடுங்கள் பின்னர் பாருங்கள் நமது அரசு பள்ளி மாணவர்கள் இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ்வார்கள். மாணவர்களின் அறிவுப்பசிக்கு தீனி போடுங்கள். பல்வேறு மொழிகளை கற்றால் வேறு மாநில வேற்று நாட்டு மாணவர்களோடு கலந்துறையாடி மேன் மேலும் தம் அறிவாற்றல் அதிகப்படுத்தி கொள்வர். வேற்று மாநில வேற்று நாட்டவருக்கு நம் தமிழ் மொழி கற்றுக்கொடுத்து அவர்களையும் தமிழ் மொழி மீது ஆர்வத்தை தூண்டி விடுவார்கள். இப்படி தான் மொழியை வளர்க்க வேண்டும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால் மொழி வளராது மாறாக அரசியல்வாதிகள் சினிமாகாரர்கள் கோடீஸ்வரர்கள் குழந்தைகள் தான் நன்கு வளர்வார்கள். பாமர ஏழை மக்கள் குழந்தைகள் வளராது. அரசு பள்ளி ஆசிரியர்களை முதலில் ஒழுங்காக பள்ளிக்கு பணிக்கு வரச் சொல்லுங்கள். வட்டம் மாவட்டங்களை பள்ளி கேட்டிற்குள் செல்ல தடை போடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X