பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அட்மிட்

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை-நெஞ்சு வலி காரணமாக, சிவசங்கர் பாபா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை, கேளம்பாக்கம்அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர் மீது, மூன்று மாணவியர் பாலியல் புகார் அளித்தனர். அதனால், 'போக்சோ' உள்ளிட்ட சில பிரிவுகளில், இரு வழக்குகள்

சென்னை-நெஞ்சு வலி காரணமாக, சிவசங்கர் பாபா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



latest tamil news



சென்னை, கேளம்பாக்கம்அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர் மீது, மூன்று மாணவியர் பாலியல் புகார் அளித்தனர். அதனால், 'போக்சோ' உள்ளிட்ட சில பிரிவுகளில், இரு வழக்குகள் பதியப்பட்டன.சி.பி.சி.ஐ.டி., போலீசார், சிவசங்கர் பாபாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், புழல் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவிற்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவரது உடல்நிலை குறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'வயது மூப்பின் காரணமாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
25-ஜூலை-202118:02:31 IST Report Abuse
RaajaRaja Cholan எதற்கு , எதையும் நீக்க போகிறார்களா , செத்த பாம்புக்கு நீக்கினால் என்ன இல்ல நீக்காவிட்டால் என்ன , எடுத்து விடலாம் , செத்த கிளிக்கு கூண்டு எதற்கு
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202116:44:27 IST Report Abuse
ram அதுதானே என்னடா இன்னும் நெஞ்சு வலி வரலியேன்னு பார்த்தேன்.
Rate this:
Cancel
Chidam - 325,இந்தியா
25-ஜூலை-202116:31:33 IST Report Abuse
Chidam கதம் கதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X