அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
சென்னை சேப்பாக்கம்-- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதியை, சில நாட்களாக தொகுதிக்குள் காண முடியவில்லை என்பதால், தொகுதி மக்கள் பலரும், கோரிக்கை மனுக்களோடு அவரது வீடு தேடி சென்றனர்.மனுக்களை பெற்ற உதயநிதி குடும்பத்தினரும், தி.மு.க.,வினரும், 'எம்.எல்.ஏ., படப்பிடிப்புக்கு போயிருக்காரு. சில நாட்களில் வந்துடுவாரு. உங்களை நேரில் சந்திப்பாரு'ன்னு கூறி

சென்னை சேப்பாக்கம்-- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதியை, சில நாட்களாக தொகுதிக்குள் காண முடியவில்லை என்பதால், தொகுதி மக்கள் பலரும், கோரிக்கை மனுக்களோடு அவரது வீடு தேடி சென்றனர்.



latest tamil news



சினிமாவுக்கு முழுக்கு அடுத்த கட்டத்துக்கு தயார் ஆகிறார் உதயநிதி

மனுக்களை பெற்ற உதயநிதி குடும்பத்தினரும், தி.மு.க.,வினரும், 'எம்.எல்.ஏ., படப்பிடிப்புக்கு போயிருக்காரு. சில நாட்களில் வந்துடுவாரு. உங்களை நேரில் சந்திப்பாரு'ன்னு கூறி அனுப்புகின்றனர்.இப்படி தினமும், வீட்டுக்கே மனுக்கள் வருவது, உதயநிதியின் தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அதையடுத்து, உதயநிதியிடம் பேசிய ஸ்டாலின், 'கட்சி வேலையும், எம்.எல்.ஏ., பொறுப்பும் அதிகமாக இருக்க, தொடர்ந்து ஏன் நடிக்கிறாய்' என, கேட்டுள்ளார். 'நடித்தது போதும்; தீவிரமாக அரசியல் வேலையை பார்' என்றும் கூறி உள்ளார்.

இதனால், தற்போது நடித்து வரும் மூன்று படங்களை விரைவாக முடித்துவிட்டு, அதன்பின், சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்கு போட, உதயநிதி திட்டம் போட்டுள்ளார். உதயநிதி ஆதரவாளர்கள் கூறியதாவது:மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார். அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இருந்தாலும், 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.


latest tamil news


இன்னும் சில நாட்களுக்குள் மொத்த படமும் முடிந்து விடும்.அடுத்து, கனா பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும், ஆர்டிக்கிள் 15 என்ற, மொழி மாற்று படத்தில், உதயநிதி நடிக்க உள்ளார். இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார். சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்குவதற்கு முன், ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, ஒரு சிறந்த படமாக, மாரி செல்வராஜ் படம் இருக்கும் என, உதயநிதி நம்புகிறார். மாரி செல்வராஜ் படத்தை முடித்த பின், முழு நேரமும் அரசியல் பணியில் உதயநிதி கவனம் செலுத்துவார். அதிகபட்சம் நான்கு மாதம் மட்டுமே சினிமா நடிகராக உதயநிதி இருப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
31-ஜூலை-202117:28:01 IST Report Abuse
bal நடிப்பா அதை நீர் செய்தீர்...???? கன்றாவி.....படங்கள்...
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-202112:37:03 IST Report Abuse
Matt P சினிமாவில பெரிசா வருவான்னு நினைச்சு தான் அவன் காலை புடிச்சு இவன் கையை புடிச்சு சேர்த்து விட்டேன். அதுக்கு தான் லாயக்கு இல்லை. அரசியலிலாவது பொழைச்சுக்கவான்னு பார்ப்போம். ..இப்படி ஒரு கவலை இருப்பது எந்த தகப்பனுக்கும் இயல்பு தானே.
Rate this:
Cancel
V Rajasekaran - Chennai,இந்தியா
31-ஜூலை-202110:56:25 IST Report Abuse
V Rajasekaran பாரம்பரியம் மிக்க தமிழ் சினிமா துறைக்கு இது பெரும் நஷ்டம் ஆனால் அரசியலுக்கு ஒரு மாபெரும் முழுநேர அரசியல்வாதி கிடைப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X