'மாஜி' தலைவர் ஆவேசம்; பஞ்சாப் காங்.,கில் குழப்பம்

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சண்டிகர்-''கட்சியின் மேலிட தலைவர்கள் என்னை சுத்தமாக மறந்து விட்டனர்,'' என, பஞ்சாப் காங்., தலைவராக இருந்த சுனில் ஜாக்கர் ஆவேசமாக கூறியுள்ளார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. தீவிர விசுவாசிஅடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட்

சண்டிகர்-''கட்சியின் மேலிட தலைவர்கள் என்னை சுத்தமாக மறந்து விட்டனர்,'' என, பஞ்சாப் காங்., தலைவராக இருந்த சுனில் ஜாக்கர் ஆவேசமாக கூறியுள்ளார்.



latest tamil news



பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. தீவிர விசுவாசிஅடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது.இவர்களுடன் கட்சித் தலைமை நடத்திய பல சுற்று பேச்சுகளுக்குப் பின், கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் பதவியேற்றார்.

அந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலத் தலைவராக ஏற்கனவே இருந்த சுனில் ஜாக்கர் பேசியதாவது:கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் என்னை முற்றிலும் மறந்துவிட்டார். கட்சியில் சிலருக்கு ஏதாவது அதிருப்தி இருக்கலாம். அப்போது அவர்களுடன் பேசி, நாங்கள் ஆதரவாக இருப்போம் என, மூத்த தலைவர்கள் உறுதியளிக்க வேண்டும்.


latest tamil news


இந்த பதவியேற்பு விழாவுக்கு பலரையும் அழைத்த ஹரிஷ் ராவத், என்னை முற்றிலுமாக மறந்துவிட்டார். நான் ஒரு தொண்டனாக தற்போது பங்கேற்கிறேன். என்ன நடந்தாலும் நான் கட்சியின் தீவிர விசுவாசியாகவே இருப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.அதிருப்தி லோக்சபா சபாநாயகராக நீண்ட காலம் இருந்த, மறைந்த பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் ஜாக்கர், 67. மூன்று முறை பஞ்சாப் எம்.எல்.ஏ.,வாகவும், ஒரு முறை லோக்சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுனில் ஜாக்கர்.இவரது அதிருப்தி பேச்சால், பஞ்சாப் காங்கிரசில் குழப்பம் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
25-ஜூலை-202111:51:26 IST Report Abuse
Raj கர்நாடகாவில் நாளை பிஜேபியில் முதல்வர் மற்றம் இருக்கிறது, அதை பற்றி எழுத மாட்டார்கள், அடுத்த கட்சி என்றால், டமார், பிளவு, குழப்பம் .....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜூலை-202109:48:12 IST Report Abuse
sankaseshan சோனியாவுக்கு 70 வயதாகி விட்டது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-ஜூலை-202109:43:43 IST Report Abuse
vbs manian காங்கிரஸ் கட்சி யாரையும் எந்த மாநிலத்திலும் வளர விடாது. ஆந்திராவில் சட்டையை மாற்றி போடுவது ஒரு வருடத்தில் ஆறு முதல் அமைச்சர்கள். தலைவர்களை பகடை கைய்களை போல் உபயோகித்து பலவீனம் ஆகி இன்று காணாமல் போய் விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X