கிழக்கிந்திய மாநிலங்கள் மேம்படுத்த பாஜ., அரசு திட்டம்- அமித் ஷா

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஷில்லாங்: உள்துறை அமைச்சர் அமித் ஷா மேகாலயா மாகாணத்தின் தலைநகர் ஷில்லாங்கில் பல முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தி பின்னர் கூட்டத்தின் இடையே உரையாற்றினார்.இந்தியாவின் வடகிழக்கு பகுதியை பொருளாதார அடிப்படையில் முன்னுக்குக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கிழக்கு காசி மலைத்தொடர், ஹீவாங் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து சேவை

ஷில்லாங்: உள்துறை அமைச்சர் அமித் ஷா மேகாலயா மாகாணத்தின் தலைநகர் ஷில்லாங்கில் பல முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தி பின்னர் கூட்டத்தின் இடையே உரையாற்றினார்.latest tamil news


இந்தியாவின் வடகிழக்கு பகுதியை பொருளாதார அடிப்படையில் முன்னுக்குக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கிழக்கு காசி மலைத்தொடர், ஹீவாங் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் கிழக்கிந்திய மாகாணங்களில் தொழில் போக்குவரத்து இந்த சாலைகளில் அதிகரித்து மாநில வருவாய் அதிகரிக்கும். இரண்டாயிரத்து 23 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த எட்டு மாநிலங்களில் புதிதாக ரயில்வே போக்குவரத்து மற்றும் விமான சேவை ஏற்படுத்தப்படும்.

கிழக்கு மாநிலங்களில் தலைநகரங்கள் அனைத்தும் ரயில்வே போக்குவரத்தால் தொடர்புக்கு உள்ளாகும். இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேகாலயா மாநில முதல்வர் கொன்ராட் சங்மா மற்றும் யூனியன் அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து உரையாற்றினர்.


latest tamil news


அசாம் தேர்தலில் பாஜ., மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கிழக்கிந்திய மாநிலங்களுக்கு வருகை தந்தார். உம்சவல்ஹி பகுதியில் ஆக்சிஜன் தொழிற்சாலையை திறந்து வைத்த அமித்ஷா சோட்ரா பகுதியில் காடு வளங்களை மேம்படுத்தும் திட்டத்தை துவக்கினார்.

விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்டு வளங்களை மேம்படுத்த ஓர் புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். வறட்சி மற்றும் வெள்ளம் ஆகியவற்றை தடுக்க மலைப்பகுதிகளில் விண்வெளி தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக கிழக்கிந்திய மாகாணங்களில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
25-ஜூலை-202117:36:41 IST Report Abuse
Rajas உங்கள் ஆட்சி வளர்ச்சி என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்தாலே பயமாக இருக்கிறது. அந்த திட்டம் சரி வருமா என்று கூட சரியாக ஆராயாமல் மக்களின் வரி பணத்தை அங்கே கொண்டு போய் கொட்டி நாசம் செய்கிறீர்கள். உதாரணத்திற்கு இந்தியாவிற்கு தேவையில்லாத ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்ட். இதன் மூலம் அந்த இடங்களில் ஒழுங்காக நடந்து கொண்டிருந்த வியாபாரம் கெட்டது தான் மிச்சம். அடுத்தது ஆளே வராத வட இந்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் பல ஏர்போர்டுகளை ஏற்படுத்தியது மற்றும் சிலவற்றை International Airport என்று மாற்றியது.
Rate this:
KAS - Lagos,நைஜீரியா
25-ஜூலை-202119:36:41 IST Report Abuse
KAS. Good for nothing....
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
25-ஜூலை-202116:55:24 IST Report Abuse
Kumar தமிழ்நாடும் கிழக்கிந்தியா தானே.எப்படி இருந்தாலும் சரி அமித்ஷா வளர்ச்சி என்று கூறினாலே நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம்.எங்களுக்கு குடியும்,சூதாட்டமும் போதும். அப்படியே இலவசமாக எதாவது தந்தால் கண்டிப்பாக வரவேற்போம்.வளர்ச்சி என்ற வார்த்தை தமிழனாகிய எங்களுக்கு பிடிக்காத வார்த்தை. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Rajas - chennai,இந்தியா
25-ஜூலை-202120:53:18 IST Report Abuse
Rajasவளர்ச்சி என்றால் மக்களை துன்புறுத்தி வரும் பெட்ரோல் டீசல் வரியால் மத்திய அரசுக்கு வருமானம் கொட்டுறதே அந்த வளர்ச்சியா...
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஜின்பிங் இந்திய எல்லைக்கு இணையாக 430 கி மீ தூரத்துக்கு நியாங்சி யிலிருந்து திபெத் தலைநகரம் லாஸா வரை புல்லட் ரயில் போட்டு அதில் கெத்தா பயணம் செய்து காட்டிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X