ஓ.பி.சி., பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்!

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
கல்வி, வேலைவாய்ப்பில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி வருகிறது. எந்தெந்த ஜாதியினர், இப்பட்டியலில் இடம் பெறலாம் என்பது குறித்து, மத்திய அரசே இதுவரை முடிவு செய்தது. இனி, மாநில அரசுகள் முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கும் வகையில், விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.இட ஒதுக்கீடுஇதுகுறித்து,
OBC, Caste List, States, ஓபிசி, ஜாதி, மாநிலங்கள், முடிவு

கல்வி, வேலைவாய்ப்பில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி வருகிறது. எந்தெந்த ஜாதியினர், இப்பட்டியலில் இடம் பெறலாம் என்பது குறித்து, மத்திய அரசே இதுவரை முடிவு செய்தது. இனி, மாநில அரசுகள் முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கும் வகையில், விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.


இட ஒதுக்கீடு


இதுகுறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:
கடந்த, 2018ல், மஹாராஷ்டிராவில் அதிகமாக இருக்கும் மராத்தா ஜாதியினருக்கு, அம்மாநில அரசு, 16 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, '50 சதவீதத்திற்கு மிகாமல், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil news'இப்படி, ஒரு ஜாதிக்கு மட்டும் உள்ஒதுக்கீடாக, 16 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும்' எனக் குறிப்பிட்டு, மராத்தா ஜாதியினருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மராத்தா ஜாதியை போல, நாடு முழுதும் பல ஜாதிகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.

அவற்றுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதில் தவறில்லை என்று, மத்திய அரசு கருதுகிறது. அது, அரசியல் ரீதியிலும், தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறது. இதனால், ஓ.பி.சி., பட்டியலில் யாரை சேர்க்கலாம் என, தான் வைத்திருக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு எடுத்துள்ளது. இதனால், மராத்தா உள் ஒதுக்கீடு போன்ற, பல குழப்பங்கள் தீர வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு நினைக்கிறது.


latest tamil newsஏற்கனவே, திருத்தப்பட்ட சட்டமாக இருக்கும் அரசியல் சட்டம், 102ல், மேலும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து, அதை சட்டமாக்க, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, 27 சதவீத ஓ.பி.சி., பட்டியலில், யார் இடம்பெற வேண்டும் என்பதை, இனி மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம். தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நன்குடி வேளாளர் போன்ற பல ஜாதிகள், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெறாமல் இருந்தன.

இனிமேல், அவர்களும் ஓ.பி.சி., பட்டியலுக்குள் வரலாம். ஆனால், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் இடையே, இடஒதுக்கீடு விஷயத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. உச்ச நீதிமன்றம், மொத்த இடஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என, தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு என, மத்திய அரசு புதிதாக அளித்துள்ள, 10 சதவீதத்தை சேர்த்தால், மொத்த இடஒதுக்கீட்டின் அளவு, 59.5 சதவீதமாகிறது.


latest tamil news

குழப்பம் இருக்காது


அதை எதிர்த்தும் பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, அது நிலுவையில் இருக்கிறது. ஓ.பி.சி., பட்டியலில், எந்த ஜாதிகள் இடம் பெறும் என்பதை, இனி மாநில அரசே முடிவு செய்யும் என்ற, சட்டத் திருத்தம் வருவதால், மாநில பட்டியலில், பிற்படுத்தப்பட்டோர் ஜாதியில் இருந்தும், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெற முடியாத குழப்பம் இருக்காது. ஆனால், மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற குழப்பங்கள் தீருமா என, தெரியவில்லை.

மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட தனி உள் ஒதுக்கீடு போலவே, தமிழகத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இனி, அந்த இட ஒதுக்கீடு செல்லுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டுக்கும் பிரச்னை வரலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
-- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202119:20:58 IST Report Abuse
Vittalanand பிராமணர்கள் சமூக ரீதியில் கடந்த 1976 லிருந்து பின் தங்கிவிட்டார்கள். பொருளாதாரம் இழந்து நிர்மிறார்கல். அவர்கள் தற்போது ஏழ் மையில் விடுகிறார்கள். அவர்களையும் obc பட்டியலில் சேர்க்கவேண்டும்
Rate this:
Cancel
25-ஜூலை-202116:00:34 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு பக்கம் தமிழகம்தான் மிகவும் முன்னேறிய மாநிலம்😶 என்று மார்தட்டிக் கொள்கிறோம் இன்னொரு பக்கம் இங்குதான் பிற்பட்ட சாதிப் பட்டியலில் அதிகபட்ச சதவீத சாதிகள்🤔 சேர்க்கப்பட்டுள்ளன .. அப்பட்டியலிலும்🤕 வன்கொடுமை மற்றும் ஆணவக் கொலைகளுக்கு புகழ் பெற்றவர்களும் அடக்கம்.. ஐயம் இல்லாமல் இது 420 வேலை. எவ்வித ஆதாரமும் இல்லாமல் வாக்கு வங்கிக்காக பல முன்னேறிய சாதிகள் பட்டியலில் சேர்ப்பது மாநில அரசுகளுக்கு வழக்கம்தான் . எனவே ஒரே மத்திய பட்டியலோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் கிரீமிலேயர் முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
25-ஜூலை-202116:41:00 IST Report Abuse
vadiveluஅந்த மூன்று விழுக்காடு மக்களை தவிர எல்லோரும் மத வேறுபாடின்றி பின்தங்கியவர்கள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் பிறகு என்ன காசு இருக்கிறவன் வெகுவாக முன்னேறுவான். உண்மையில் பின் தங்கியவர்கள் பல வருடங்களுக்கு மேலும் மேலும் பின் தங்கி போவார்கள்.அரசியல் வாதிகளுக்கு இலவசங்களையும், ஓட்டுக்கு பணமும் கொடுக்க மிகவும் எளிதாகி போகும்....
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
25-ஜூலை-202113:41:34 IST Report Abuse
வந்தியதேவன் நிறைய பேருக்கு “இடஒதுக்கீடு”...ன்னாவே எரியுது...? அது ஏன்னே புரியல...? பல்லாயிரம் ஆண்டுகளாய் அடிமையாய் இருந்தவன், அடிமையாகவே இருக்க வேண்டும் எனும் குறுகிய அறிவுதான் என எண்ணத் தோன்றுகிறது...
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
25-ஜூலை-202115:48:07 IST Report Abuse
Saiஅடிமையா இருந்தவன்? ஆங்கிலேயனுக்கு பின் காங்கிரசுக்கு இன்று பிஜேபிக்கு தாவி தாவி நத்திப் பிழைப்பவர் களையா சொல்றீர் ?...
Rate this:
25-ஜூலை-202115:53:32 IST Report Abuse
ஆரூர் ரங்எல்லா சாதியினரது மாநாடுகளிலும் தாங்கள் ஒரு காலத்தில் ஆண்ட சாதி என்று பேனர் வைக்கிறார்கள்.. 🤫 அப்போ யார் எப்போதுமே ஆளாத சாதி? அவரவர் ஆண்டபோது மற்ற சாதியினரை சமமாகவா🤝 நடத்தினர்? சாதிய வன்முறை ஆணவக் கொலை செய்யும் சாதிகள் எப்போதுமே அடிமைகளாக இருந்ததில்லை. ஆனால அவையும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளன. ஆக 2000 ஆண்டு அடிமை என்பது பொய். பித்தலாட்டம். ஆயிரம் ஆண்டுகளாக முகலாய முஸ்லிம்களிடமும் பின்பு வெள்ளைக்கார கிறிஸ்தவரகளிடமும் எல்லோருமே அடிமைகளாய் இருந்தோம் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட உண்மை...
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
25-ஜூலை-202119:44:29 IST Report Abuse
வந்தியதேவன்முகாலய முஸ்லீம்களிடமும், வெள்ளைக்கார கிறிஸ்தவர்களிடமும் அடிமையாக இருந்தோம்...னு பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க......
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
25-ஜூலை-202121:33:23 IST Report Abuse
Davamani Arumuga Gounderதிருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்... ஆங்கிலேயனுக்கு பின் காங்கிரசுக்கு இன்று பிஜேபிக்கு தாவி தாவி நத்திப் பிழைப்பவர் களையா சொல்றீர் ?... ... ஆம், ஆம்.. அவர்களையே தான் சொல்கிறார் இவர்.. ஆங்கிலேயர்களே மதராஸை ஆளவேண்டும் .. என்று கூவி ஆங்கிலேயர்களை நத்திப்பிழைத்தவர்கள்.. பின்.. காமராஜர் என்ற ஒரு மக்கள் நல மகானை தோற்கடிக்க காங்கிரஸை நத்திப் பிழைத்து, பின் பி.ஜே.பி. யை நத்திப் பிழைத்து அவர்களின் மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகித்து 4.3/4 ஆண்டு பதவி சுகம் கண்டு பின் மறுபடியும் காங்கிரஸை நத்திப்பிழைத்து 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பதவி சுகம் கண்டவர்களைத்தான் அவர் கூறுகிறார்.. ஐயகோ இது ஒரு தவறா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X