பொது செய்தி

இந்தியா

"அட எவ்வளவு தைரியமாக தமிழக அரசை கண்டிக்கிறீர்கள்..."

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை எப்போதாவது ஏறினால் அது செய்தி. மோடியின் பா.ஜ., ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஏறாவிட்டால் செய்தி. என்ன ஒரு கொடுமையான, கொள்ளைக்கார அரசு!- தமிழக காங்., எம்.பி., ஜோதிமணி'அட எவ்வளவு தைரியமாக, தமிழக அரசை கண்டிக்கிறீர்கள்... தமிழக அரசு நினைத்தால், 30 ரூபாய் குறைத்து, 1 லிட்டர் பெட்ரோல், டீசலை கொடுக்க முடியும்...' என, போட்டுக் கொடுக்கத்
பேச்சு_பேட்டி_அறிக்கை, காங்கிரஸ், ஜோதிமணி, பெட்ரோல்

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை எப்போதாவது ஏறினால் அது செய்தி. மோடியின் பா.ஜ., ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஏறாவிட்டால் செய்தி. என்ன ஒரு கொடுமையான, கொள்ளைக்கார அரசு!
- தமிழக காங்., எம்.பி., ஜோதிமணி


'அட எவ்வளவு தைரியமாக, தமிழக அரசை கண்டிக்கிறீர்கள்... தமிழக அரசு நினைத்தால், 30 ரூபாய் குறைத்து, 1 லிட்டர் பெட்ரோல், டீசலை கொடுக்க முடியும்...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கைஅண்ணாமலை பல்கலையுடன் நான்கு மாவட்ட கல்லுாரிகள் இணைப்பு வரவேற்கத்தக்க முடிவு. இதற்காக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். பல்கலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பல உள்ளன. அவற்றையும் இதுபோல தீர்வு காண கேட்டுக் கொள்கிறேன்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'அந்த நான்கில் ஒன்று, ஜெ., பெயரிலான பல்கலை. அதனால் வேகம். பிற கோரிக்கைகள், பரிசீலனைக்கு பின் தான் முடிவு...' என, சொல்லும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கைlatest tamil news


குமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை, கேரளாவுக்குக் கடத்தும் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'நல்லா விசாரித்து பார்த்தால், அந்தப் பணிகளை செய்பவர்கள், அரசியல் பெருந்தலைகளாகத் தான் இருப்பர். அப்பாவி மக்கள் ஒருபோதும் அந்த வேலையை செய்ய மாட்டார்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கைமின்வாரிய விஜிலென்ஸ் டி.ஐ.ஜி., ரவி உடனான சந்திப்பில், முல்லை பெரியாறில் சட்டத்திற்கு புறம்பான வகையில், அதிக திறன் மோட்டார்களை வைத்த தண்ணீர் திருடப்படுகிறது என்றும், அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தோம்.
- தமிழக வருவாய் துறை அமைச்சர் தியாகராஜன்


'போதுமான அளவில் நீர்பாசன வசதியை அரசு செய்து கொடுத்தால், தண்ணீரை யாரும் திருட மாட்டார்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் தியாகராஜன் அறிக்கைகடலுார் அருகே எங்களின் சுவர் விளம்பரத்தை, ஜாதிய மனநோயாளிகள் அழித்துள்ளனர். இட ஒதுக்கீடு ஒழித்து சமூகநீதியை அழித்தொழிக்கத் துடிக்கும்; ஜாதி மத வெறியைத்துாண்டி நாட்டை நாசப்படுத்த முயற்சிக்கும் சனாதனிகளை விரட்டியடிக்காமல், எங்களின் விளம்பரத்தை அழிப்பது என்னே பேதைமை!
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களுக்கு தடை விதித்து விட்டால், சில குட்டித் தலைவர்களும் உருவாக மாட்டார்கள்; இந்த பிரச்னையும் வராது...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கைlatest tamil news


இஸ்ரேல் கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் வாயிலாக, இந்தியாவில், 300 தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி


'அப்படியே உங்கள் தலைவர் ராகுல், ஆண்டில், ஆறு மாதங்கள் எங்கு செல்கிறார் என்பதையும் கண்காணிக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் கேட்கின்றனரே...' என, பதிலடி கொடுக்க தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கைசுருக்கு மடி வலை விவகாரத்தில், போராடும் மீனவர்களை, தமிழக அரசு அழைத்து பேசி, உரிய தீர்வு காண வேண்டும். இதை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது சரியானதல்ல. நம் மீனவர் நலன்கள் பாதிக்காத வகையில், தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.
- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


'இந்த பிரச்னையில் அரசின் தலையை உருட்டாமல், மீனவர்கள் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ளலாம்; முடிவை, அரசிடம் தெரிவித்தால் போதுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:சிறை காவலர்கள், 5,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும்படி விடுத்த கோரிக்கை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்.
- தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி


'கொரோனாவே ஓடிப் போய் விட்டது; இந்த நேரத்தில் கேட்டால் கொடுப்பரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டிதமிழுக்கு அமுதென்று பெயர்; தமிழனுக்கோ அகதி என்று பெயர் என நினைத்து, அப்பெயரை எங்கள் முதுகில் துாக்கி வைப்பதற்கு, கர்நாடக அரசு முனைந்தால், அதை மத்திய அரசும் தட்டிக் கேட்காமல் போனால், தமிழர்களின் தன்மான உணர்வு எழுச்சி பெறும்
- அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வைகைசெல்வன்


'இப்படி அடுக்குமொழி வசனம் பேசாமல், நீதிமன்றம் வாயிலாக சரியான நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள்...' என, அறிவுரை அளிக்க தோன்றும் வகையில், அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வைகைசெல்வன் அறிக்கைlatest tamil news


மாநில சுயாட்சியை நோக்கமாக கொண்டிருக்கும், தி.மு.க., இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்தே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, தெளிவான சிறப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
- மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்


'மாநில சுயாட்சி கொள்கையை, தி.மு.க.,வே மறந்து விட்டது; நீங்கள் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் அறிக்கை60 வயதில் ஓய்வு என்பது, அரசு பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு சரியாக வராது. இவர்கள், 24 மணி நேரமும் பஸ்களை இயக்க வேண்டும் என்பதால், 50 வயதுக்கு மேல் சோர்வு ஏற்பட்டுவிடும். எனவே, 58 வயதில் ஓய்வு அளிக்க வேண்டும்.
- அரசு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்க ஆலோசகர் அங்குசாமி


'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அரசு ஊழியர் ஓய்வு வயது விரைவில் மீண்டும், 58 ஆகப் போகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், அரசு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்க ஆலோசகர் அங்குசாமி பேட்டி

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-ஜூலை-202123:32:16 IST Report Abuse
Vena Suna கமலுக்கு நடிப்பும் வரலை..அரசியலும் வரலை...ஹிஹிஹி
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-ஜூலை-202118:41:11 IST Report Abuse
vbs manian பெட்ரோலுக்கு கொடுக்கும் நூறு ரூபாயில் மோடி அரசு பத்தொன்பது ரூபாய் எடுத்து கொள்கிறது. மாநில அரசு நாற்பத்து நான்கு ரூபாய் எடுத்து கொள்கிறது. யாரால் விலை உயருகிறது,
Rate this:
Cancel
RAJ - ,
25-ஜூலை-202118:11:39 IST Report Abuse
RAJ தூக்கத்துல அப்போ அப்போ எதாவது சொல்லவாங்க நாம அதை சீரியசா எடுத்துக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X