வாக்காளர்களுக்கு பணம்: டிஆர்எஸ் கட்சி எம்.பி.,க்கு 6 மாதம் சிறை

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (28)
Advertisement
ஐதராபாத்: கடந்த லோக்சபா தேர்தலில், தனக்கு ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி(டிஆர்எஸ்) எம்.பி., மாலோத் கவிதாவிற்கும், அவரது உதவியாளர்களுக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமின் வழங்கி உள்ளது.தெலுங்கானா மாநிலம் மகபுபாபாத்
வாக்காளர்கள், பணம், டிஆர்எஸ், எம்.பி., சிறை

ஐதராபாத்: கடந்த லோக்சபா தேர்தலில், தனக்கு ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி(டிஆர்எஸ்) எம்.பி., மாலோத் கவிதாவிற்கும், அவரது உதவியாளர்களுக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமின் வழங்கி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபுபாபாத் லோக்சபா தொகுதி எம்.பி., ஆக இருப்பவர் மாலோத் கவிதா. கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது அவரது உதவியாளர் சவுகத் அலி, கவிதாவிற்கு ஓட்டுப்போட வேண்டும் எனக்கூறி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துள்ளார். அதனை, தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

இது தொடர்பான வழக்கு, நம்பள்ளியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது, கவிதாவிற்கு ஆதரவாக பணம் கொடுத்தததை சவுகத் அலி ஒப்பு கொண்டார். இதனையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கவிதா மற்றும் சவுகத் அலி ஆகியோருக்கு தலா 6 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும், தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

தெலங்கானாவில் உள்ள மஹபூபாபாத் Mahbubabad தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கவிதா மலோத் Kavitha Maloth. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019ல் தேர்தல் பிரசாரத்தின்போது கவிதாவின் உதவியாளர் சவுகத் அலி ஒரு ஏரியாவில் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாயை விநியோகித்தார். கவிதாவுக்கு ஓட்டு போடும்படி கூறி பணத்தை கொடுத்தபோது பறக்கும் படை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். கவிதா சொல்லித்தான் பணம் கொடுத்ததாக அலி ஒப்புக்கொண்டார். ஐதராபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. கவிதா, அலி இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இருவருக்கும் 6 மாதம் சிறை, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


latest tamil news


வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில், சிட்டிங் எம்.பி., ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
25-ஜூலை-202123:48:04 IST Report Abuse
Anbuselvan டிஸ்மிஸ் செய்து அவரது MP பதவியை பரித்தால்தான் மற்றவர்களுக்கு பயம் வரும்.
Rate this:
Cancel
25-ஜூலை-202122:13:04 IST Report Abuse
முருகன் தண்டனை தர வேண்டும் என்றால் அனைத்து எம்பி, எம்ல்ஏ விற்கும். கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kannan rajagopalan - Chennai,இந்தியா
25-ஜூலை-202121:58:20 IST Report Abuse
Kannan rajagopalan தமிழ் நாட்டில் பாதிரியார் டிராமா . இங்கே இதுவா ? மேல் முறையீடு , வாய்தா , ஜாமீன் , மக்கள் மறதி , அம்மா கட்சி மாறுதல் .........கதை முடிந்துவிடும் . வாழ்க ஜனநாயகம் . ஏதோ டைம் பாஸ் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X