புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று காலை 11:00 மணிக்கு ரேடியோ மூலம் ‛மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 79வது மன்கி பாத் ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
உற்சாகப்படுத்த வேண்டும்
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் டோக்கியோவில் நடக்கிறது. இந்த நேரத்தில் நம்முடைய வீரர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் நம்முடைய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆதரவளித்து உற்சாகப்படுத்த வேண்டும். ஒலிம்பிக்கில் நமது வீரர்கள் தேசியக்கொடி ஏந்தி சென்றதை பார்த்த போது நான் மட்டுமல்ல இந்த தேசமே உற்சாகம் அடைந்தது. ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக இணைந்து, வீரர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்த வேண்டும். ஒலிம்பிக்கில் இந்தியாவின் வெற்றி ஏற்கனவே துவங்கிவிட்டது. அனைவரும் தங்களின் அபிமான வீரர்களின் வெற்றியை பகிர்ந்து இ்ந்திய வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
வீரவணக்கம்
நாளை(ஜூலை 26) கார்கில் போர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கார்கில் போர் என்பது நம்முடைய படை வீரர்களின் ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றை குறிக்கும். இதை ஒட்டுமொத்த உலக நாடுகள் கண்டுள்ளன. இந்த நாளை அம்ரூத் மகோத்சவ் என இந்தியா கொண்டாடுகிறது. இந்த நாளில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
இளைஞர்களின் எண்ணம்
இந்தியா வளர்ச்சியை நோக்கி நடைபோட அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், ‛மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு ஆலோசனை வழங்கும் மக்களில் 75 சதவீதம் பேர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. ‛மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம், இன்றைய தலைமுறையின் எண்ணங்களை அறிய முடிகிறது. இந்த மாதமும் 30 ஆயிரம் கருத்துகள் வந்துள்ளன. எந்த நிகழ்ச்சிக்கும் இது போன்ற கருத்துகள் வந்தது இல்லை. மக்களின் கருத்து ‛மன் கி பாத்' தை வலுப்பெற செய்கிறது.என்னால் அனைவரின் ஆலோசனைகளையும் பயன்படுத்த முடியாது. இதனால், நல்ல கருத்துகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி விடுகிறேன்.
மழைநீர் சேகரிப்பு
இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பராமரிப்பதும், பேணுவதும் நம்முடைய கலாசாரம் ஆக அன்றாட வாழ்க்கையில் அடங்கி உள்ளது. மழைநீரின் மகத்துவத்தை உணர்ந்து, ஒவ்வொரு துளி மழைநீரையும் பாதுகாக்க வேண்டும். இதை பராமரிப்பதும், நம்முடைய பாரம்பரியத்தில் உள்ளது.
கோவிட் இன்னும் செல்லவில்லை
அடுத்து வரும் பண்டிகைகளுக்கு இப்போதே வாழ்த்து தெரிவிக்கிறேன். பண்டிகை காலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது, கோவிட் நம்மை விட்டு செல்லவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம், சமூக விலகல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் பண்டிகையை கொண்டாட வேண்டும்.
ஆதரவு வேண்டும்
தேசிய கைத்தறி நாள் விரைவில் வருகிறது. அனைவரும் தங்களால் முடிந்த அளவு கைத்தறி ஆடைகளை வபிரபலப்படுத்த வேண்டம். காதி ஆடைகள் சமீப காலமாக பிரபலம் அடைந்து வருகிறது.கடந்த 2014ம் ஆண்டு முதல் காதி ஆடைகளை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தேசபக்திக்கான உற்சாகம் நம்மை ஒன்று சேர்த்து உள்ளது.காதி பொருட்களை வாங்குவது தேசத்திற்கு ஆற்றும் சேவை.சமீப நாட்களாக காதிவிற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. கைத்தறி மூலம் கிடைக்கும் வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்
நீலகிரி பெண்ணுக்கு பாராட்டு

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்பவர், மலைப்பகுதிகளில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல, எளிதாக வாகன வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை ஆரம்பித்தார். இதற்காக, அவர் நடத்தும் உணவகத்தில் பணியாற்றுபவர்களிடம் பணம் சேகரித்தார். இன்று 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE