ஒரே நாளில் 262 பயங்கரவாதிகள் குளோஷ் !

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
காபூல்: ஆப்கனில் கடந்த 24 மணி நேரத்தில் 262 தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அறிவித்து உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான் பயங்கரவாதிகள் கடுமையாக தாக்கி, பல நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கன் ராணுவம் - தலிபான் பயங்கரவாதிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு
Afghanistan, forces, kill, Taliban terrorist, curfew,

காபூல்: ஆப்கனில் கடந்த 24 மணி நேரத்தில் 262 தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அறிவித்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான் பயங்கரவாதிகள் கடுமையாக தாக்கி, பல நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கன் ராணுவம் - தலிபான் பயங்கரவாதிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.


latest tamil news



இந்நிலையில் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
லக்மன், நங்கர்ஹர், நூரிஸ்தான், குனார், கஜ்னி, பக்டியா, காந்தகார், ஹெரட், பலக், ஜோவ்ஜன் ஹெல்மண்ட், குண்டூஸ் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நவடிக்கையில் 262 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 176 பேர் படுகாயமடைந்தனர். 21 ஐஇடி வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, தலிபான்களை ஊடுருவலை தடுக்கும் வகையில் காபூலை தவிர்த்து மற்ற மாகாணங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
26-ஜூலை-202105:24:18 IST Report Abuse
Charles பாகிஸ்தானை பக்கத்தில் வைத்திருக்கும் நாடுகளுக்கு என்றுமே அமைதி இருக்கமுடியாது. ஏனென்றால் பாகிஸ்தாநின் அட்டூழியத்தை ஆதரிப்பது சீநாவாகும்,
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூலை-202103:54:02 IST Report Abuse
meenakshisundaram ஒரு உலகத்தின் முன்னேற்றத்திரத்திநை அளவீடு செய்ய வேண்டுமென்றால் அது அதனை எதிர்ப்பவர்கள் திறனை பொறுத்தே இருக்கும் எவ்வளவுக்கெவ்வளவு எதிர்ப்போர் இருக்கிறார்களோ அதை பொறுத்தே ஒன்று முன்னேற முடியும் அதாவது அழிவு ப்பாதையை தேர்ந்தெடுப்பார் கைகளில் அது சிக்கிக்கொள்கிறது என்பார்கள்.இதுவே இன்று நடந்து கொண்டிருக்கிறது .கோடிக்கணக்கில் உள்ள மக்களை கட்டுப்படுத்துவது எளிது ஆனால் ஒரு சில தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்க்கென்றே உலகமும் ஆள்பவர்களும் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள் ,இந்தியாவில் இன்று இதே நிலையில் நாம் இருக்கிறோம் ,இந்த தீவிரவாதத்தில் மதம் (எல்லோரையும் ந வெளிப்படுத்த வேண்டியது ) ஒரு ஆயுதமாக .கருவியாக அமைந்து விடக்கூடாது.மத போதகர்களும் குருமார்களும் இதை உணராது இருத்தல் பெரும் அபாயம் மானுட உலகிற்கு.அவர்கள் குறுகிய நோக்கத்தில் கட்சிகளையும் வியாபாரங்களை நடத்துவது போல வாழ்வை நடத்துவது அழிவையே தரும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-ஜூலை-202121:10:29 IST Report Abuse
Ramesh Sargam கடைசி ஒரு தலிபான் தீவிரவாதி உயிருடன் இருக்கும்வரையில், அமைதி என்பது இல்லை. ஆகையால், ஒருவனையும் விடாமல் கொன்றுவிடவேண்டும். அடுத்து அவர்களுக்கு உதவிபுரியும் பாகிஸ்தான் நாட்டினரையும் கடுமையாக எச்சரிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X