பொது செய்தி

இந்தியா

இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேசப்போவது என்ன?

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஆன்டனி பிளின்கென், வரும் 27 ம் தேதி இரவு டில்லி வருகிறார். மறுநாள் காலை பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து சந்திக்கும் அவர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள்
India,இந்தியா, america, antony blinken

புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஆன்டனி பிளின்கென், வரும் 27 ம் தேதி இரவு டில்லி வருகிறார். மறுநாள் காலை பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து சந்திக்கும் அவர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: குவாட் அமைப்பில் ஒத்துழைப்பை இன்னும் அதிகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை முக்கிய பங்கு வகிக்கும். இன்னும் பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு பிளின்கன் வருகை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு துறையில் இரு தரப்பினரின் ஒத்துழைப்பை இன்னும் அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.


latest tamil news


சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சர்வதேச பயணங்களை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுக்கும்.ஆப்கனில் படைகள் வாபஸ் குறித்த அறிவிப்பை அமல்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது மற்றும் நிதி உதவி அளிப்பதை நிறுத்த பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் அங்கம் வகிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-ஜூலை-202118:46:03 IST Report Abuse
Pugazh V ஆப்கனில் படைகள் வாபஸ் குறித்த அறிவிப்பை அமல்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்// இதென்ன புதுப்புரளி?? இதுக்கும் இந்திய மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
Rate this:
Kaliraja Thangamani - Chennai,இந்தியா
26-ஜூலை-202104:39:04 IST Report Abuse
Kaliraja Thangamaniஆப்கானிஸ்தானில், இந்தியா கோடிகளில் முதலீடு செய்து இருக்கிறது. அவைகள் வீணாக போக கூடாது.தாலிபான்கள் பாகிஸ்தானின் கைக்கூலிகள். அவர்கள், நாம் கட்டிய அணையை உடைக்க முயற்சி செய்தார்கள். இது உலக அரசியல்....
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
25-ஜூலை-202117:05:41 IST Report Abuse
Nesan தப்பி தவறி உங்கள் போன் நம்பரை சொல்லிறாதீங்க ... நாடு படு கேவலமாக போகிட்டு இருக்கு
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்செல்நம்பர் கேட்டுத்தான் மளிகை கடையிலும் ஏன் சலூன்களிலும் (9 % GST) யுடன் பில் தருகிறார்கள் எங்கு சென்றாலும் நம்மை தொடர முடியும்...
Rate this:
Cancel
karavaraya -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202115:29:05 IST Report Abuse
karavaraya என்ன பேசினால் உனக்கு என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X