அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு மாலைக்குள் பதில்: எடியூரப்பா

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (10)
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கட்சித் தலைமை இன்று ((ஜூலை 25) மாலைக்குள் பதில் அளிக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக உட்கட்சியிலேயே அதிருப்தி கிளம்பியது. இதன் காரணமாக எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என கட்சி
Yediyurappa, Karnataka, CM

பெங்களூரு: கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கட்சித் தலைமை இன்று ((ஜூலை 25) மாலைக்குள் பதில் அளிக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக உட்கட்சியிலேயே அதிருப்தி கிளம்பியது. இதன் காரணமாக எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு கர்நாடக பா.ஜ.,வினர் கடிதமும் எழுதியிருந்தனர். இதனால், எடியூரப்பாவை மாற்ற பா.ஜ., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற உள்ள நிலையில், அவரின் பதவி பறிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


இது குறித்து எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சி மேலிடத்திலிருந்து இன்று (ஜூலை 25) மாலைக்குள் செய்தி வரும். உங்களுக்கும் அந்த செய்தி குறித்து தெரியவரும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக அறிவிக்கப்படுவாரா என்பதெல்லாம் கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு. இதுகுறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைமைக்கே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூலை-202102:20:11 IST Report Abuse
Bhaskaran விரைவில் காங்கிரஸ் ஆட்சி
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-ஜூலை-202121:02:42 IST Report Abuse
Ramesh Sargam இவரை விட்டால், கர்நாடகாவில் ஒரு சிறந்த தலைவர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் புதியதாக வருபவர் எவ்வளவு திறமைசாலி, அங்குள்ள மற்ற எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பார் என்று பார்க்கவேண்டும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-ஜூலை-202118:55:03 IST Report Abuse
vbs manian பா ஜா க மிக பெரிய தவற்றை செய்கிறது. காங்கிரஸ் காட்டிய அழிவு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X