பொது செய்தி

தமிழ்நாடு

குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் வாழ்த்து

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
குன்னுார் : குன்னுாரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் மோடி மன்-கி-பாத் நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தது நீலகிரிக்கே பெருமை அளிக்கிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்டிச்சோலையை சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி என்பவர் முயற்சியால், நீலகிரியில் முதல் முறையாக 'ஆம்புரிக்ஷ்' என அழைக்கும், 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் ரூ.21
குன்னூர், ஆட்டோ ஆம்புலன்ஸ், ராதிகா சாஸ்திரி, பிரதமர்,

குன்னுார் : குன்னுாரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் மோடி மன்-கி-பாத் நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தது நீலகிரிக்கே பெருமை அளிக்கிறது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்டிச்சோலையை சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி என்பவர் முயற்சியால், நீலகிரியில் முதல் முறையாக 'ஆம்புரிக்ஷ்' என அழைக்கும், 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் ரூ.21 லட்சம் செலவில் நீலகிரியில் கடந்த 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இவை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரி. இவர் 21 லட்ச ரூபாய் நிதி திரட்டி 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை வடிவமைத்து நீலகிரி மருத்துவமனைகளுக்கு வழங்கினார். குறுகலான மலைப்பாதைகளில் ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டம் நல்ல பலன் அளித்துள்ளது. இதனால் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராதிகா சாஸ்திரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமரின் பாராட்டும், வாழ்த்தும் உற்சாகம் அளிப்பதாக ராதிகா சாஸ்திரி தெரிவித்தார்.

latest tamil news
மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து, 470 சிசி திறன் கொண்ட, பஜாஜ் மாக்சிமா, ஆம்புலன்சாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்சில் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதி, ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், உள்ளிட்ட முக்கிய வசதிகள் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, வானொலியில் மன் - கி- பாத் நிகழ்ச்சியில், ராதிகா சாஸ்திரியின் சமூக சேவை குறித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.


latest tamil news


இது தொடர்பாக ராதிகா கூறுகையில், " நீலகிரி கிராமங்களில் மிகவும் குறுகலான சாலைகளில் ஆம்புலன்ஸ் சென்று வருவது பயன் அளிக்கிறது. இந்நிலையில், இந்த சேவை குறித்து முதல் முறையாக நீலகிரியை பற்றி மன் - கி- பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதும் பெருமை அளிப்பதாக உள்ளது, " என்றார்.

இவரின் முயற்சியால் ஏற்கனவே குன்னூர் அரசு மருத்துவமனையில், ஏ.சி.டி., (ஆக் ஷன் கோவிட் 19 டீம்) என்ற அதிரடி கோவிட் குழுவின், ரூ.70 லட்சம் மதிப்பிலான தானியங்கி ஆக்சிஜன் கொள்கலன் பிளான்ட் அமைத்ததும், தற்போது அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
25-ஜூலை-202123:06:26 IST Report Abuse
S.kausalya தமிழர்களாகிய நாங்கள் இந்த சாஸ்திரி ஆம்புலன்சில் ஏற மாட்டோம். அது ஆரிய Penmaniyudayadhu என்று எல்லாம் சொல்ல மாட்டார்கள். இவர்களின் தலைவர்களே தாங்கள் பதவிக்கு வர வேண்டுமென்றால் கோடிகோடி யாக ஒரு aariyanidam பணம் கொட்டி கொடுத்தவர்கள் தானே. இலவசம் என யார் கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். என்ன சிறிது சுணக்கம் இந்த பெண்மணி காட்டினாலும் உடனே ஜாதி அப்படி என கேவலபடித்துவார்கள் தமிழனின் desine அப்படி.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-ஜூலை-202120:15:41 IST Report Abuse
r.sundaram இந்த மாதிரி நாட்டில்நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட கண்டுபிடித்து பாராட்டுவதில் மோடிக்கு நிகர் மோடிதான். இந்த பாராட்டின மூலம் அந்த சகோதரிக்கு எவ்வளவு மன நிறைவு கிடைத்திருக்கும் என்பது அனுபவித்தால்தான் தெரியும். அந்த சகோதரிக்கும் மோடிக்கும் எனது பாராட்டுதல்கள்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-ஜூலை-202119:12:06 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த ஆம்புலன்ஸ் வண்டிகளை மாசு அவர்கள் ஆயிரம் குறைகள் சொல்லுவார் . அது சரி இல்லை . இது சரி இல்லை , அவரது இன்னொரு குற்ற சாட்டை பாருங்கள் அதிமுக அரசு வாங்கிய . முக கவசங்கள் தரம் அற்றவை என்று வசவு புராணத்தை ஆரம்பித்துவிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X