கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

Added : ஜூலை 25, 2021
Share
திண்டுக்கல்: கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.திண்டுக்கல்லில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய கிராம கோவில் பூசாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில்


திண்டுக்கல்: கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய கிராம கோவில் பூசாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம கோவில்களிலும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அறங்காவலர் குழு நியமனம் செய்யும் போது அர்ச்சகர் பட்டாச்சாரியார் கிராம கோவில் பூசாரிகள் இணைத்து கொள்ள வேண்டும். அனைத்து பூசாரிக்களுக்கும் கொரோனா நிதி வழங்க வேண்டும். பூசாரிகள் நல வாரியத்தை செம்மைப்படுத்தி உறுப்பினர் அடையாள அட்டை நலவாரிய உதவித்தொகை வழங்க வேண்டும் .கிராமப்புற கோயில்களுக்கு கோவிலின் பேரால் பட்டா வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். பூசாரிகள் பெண் குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகை வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகள் குழந்தைகள் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X