மஹா.,வில் 100 பேர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புனே-மஹாராஷ்டிர மாநிலத்தை, கடந்த ஒரு வாரமாக புரட்டியெடுத்த கன மழை நேற்று சற்று தணிந்தது. ராய்காட் மாவட்டம் தலாய் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 73 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 100 பேரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.34 குழுக்கள்மஹாராஷ்டிர
மஹாராஷ்டிரா, நிலச்சரிவு,

புனே-மஹாராஷ்டிர மாநிலத்தை, கடந்த ஒரு வாரமாக புரட்டியெடுத்த கன மழை நேற்று சற்று தணிந்தது. ராய்காட் மாவட்டம் தலாய் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 73 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 100 பேரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.34 குழுக்கள்மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. ராய்காட், ரத்னகிரி, பால்கர், தானே, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராய்காட் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் பலியாகினர். மாநிலம் முழுதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


latest tamil news


தேசிய பேரிடர் மீட்பு படையின் 34 குழுக்கள் மீட்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ராணுவத்தின் ஆறு குழுக்களும் மீட்பு பணியில் களம் இறங்கியுள்ளன. ராய்காட்டின் தலாய் கிராமத்தில் இதுவரை 73 சடலங்கள் மீட்கப்பட்டுஉள்ளன.காணாமல் போன 47 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. சதாரா மாவட்டம் அம்பேகர், தோகாவாலே, ரத்னகிரி மாவட்டம் பொராசே மற்றும் மிர்கான் ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை சீரமைக்கும் பணி துரிதகதியில் நடக்கிறது. சதாரா மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்; 14 பேரை காணவில்லை.மாநிலம் முழுதும் நேற்று காலை நிலவரப்படி 112 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேரை காணவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.35 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சதாரா மாவட்டத்தில் 379 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மும்பை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் 15 முதல் 20 அடி வரை வெள்ளம் தேங்கிஉள்ளது. மும்பை, தானே உள்ளிட்ட பெருநகரங்களிலும் வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலை மற்றும் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



latest tamil news



இடைவிடாத கன மழை காரணமாக மஹாராஷ்டிர மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஒரு வாரமாக புரட்டியெடுத்த மழை, நேற்று முதல் சற்று தணிந்துள்ளது.கர்ப்பிணி மீட்புகோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி மற்றும் 12 குழந்தைகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். வெள்ளம் சூழ்ந்து நிற்கும் பகுதிகளை சீரமைக்க, மாநில அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் உத்தவ் தாக்கரே, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் பார்வையிட்டனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசின் சிறப்பு முகாமில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-ஜூலை-202123:19:11 IST Report Abuse
Vena Suna நாம எவ்வளவோ நல்லா இருக்கோம்னு உணரணும்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூலை-202120:30:03 IST Report Abuse
M  Ramachandran பாவம் மக்கள் பெரும்பாலும் சாதாராந நடுத்தர ஏழலை எளிய மக்களே அவதிக்குள்ளாயினர். இங்கெல்லாம் மீட்ப்பு பணியாளர்கள் செல்வதே கடின மான வேலை..
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
25-ஜூலை-202118:10:46 IST Report Abuse
R S BALA கடலுக்கு அருகில், மலைமேல் வீடு .. இவையெல்லாம் அதிக அழிவை உண்டாக்குகின்றன ,இது போன்ற இடங்களை வசிக்க தகுதியற்ற இடமாக அரசாங்கம் அறிவித்தல் வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X