பொது செய்தி

இந்தியா

சென்னை-மும்பை மோதல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021
Share
Advertisement
புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப். 19ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் (ஏப். 9 - மே 2) 'கொரோனா' பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19 முதல் அக். 15 வரை நடத்த பி.சி.சி.ஐ.,

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப். 19ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.



latest tamil news




இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் (ஏப். 9 - மே 2) 'கொரோனா' பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19 முதல் அக். 15 வரை நடத்த பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news



இதன்படி, செப். 19ல் துபாயில் நடக்கவுள்ள முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றின் கடைசி போட்டியில் பெங்களூரு-டில்லி அணிகள் (அக். 8) மோதுகின்றன. ஏழு நாட்கள் தலா 2 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கும், 2வது போட்டி இரவு 7:30 மணிக்கும் துவங்கும்.முதல் தகுதிச் சுற்று அக். 10ல் துபாயிலும், 'எலிமினேட்டர்' (அக். 11), இரண்டாவது தகுதிச் சுற்று (அக். 13) சார்ஜாவில் நடத்தப்படுகிறது. பைனல், அக். 15ல் துபாயில் நடக்கவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X