பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,808 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,807 பேரும், பிற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 1,808 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 22 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,447 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 74 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,807 பேரும், பிற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 1,808 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 22 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,447 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 74 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 44,219 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,808 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,48,497 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,65,34,735 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,046 பேர் ஆண்கள், 762 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,89,005 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,59,454 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,447 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,91,222 ஆக உயர்ந்துள்ளது.

22 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,911 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூலை-202121:59:20 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 20 ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து கிராமமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதெல்லாம் மக்களின் சாதனை
Rate this:
Cancel
25-ஜூலை-202121:58:35 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் மோடி ஆசி பெட்ர எடபாடிக்கு அவர் பெருமை பேசி கொண்டவாறு 7000 தான் இந்த எண்ணிக்கைக்கு அண்ணன் க்கு 322 நாட்கள் , இதே 38000 எண்ணிக்கை , oxygen / ராம்தேவிஸ்வேர் பிரசனை வெறும் 58 நாட்கள் அப்போ மக்கள் நல்ல அரசை தான் அதுவும் செயல்படும் அரசு தெரிந்து எடுத்து உள்ளார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X