'ஒற்றுமை இந்தியா' இயக்கத்தை துவக்க பிரதமர் அழைப்பு! தேசத்துக்கு முன்னுரிமை அளிக்கும்படி வலியுறுத்தல்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:''வளர்ச்சியை நோக்கி நாடு நடைபோட மக்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். மஹாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நடத்தியது போல் தற்போது நாம் இந்தியாவை ஒருங்கிணைப்போம்' இயக்கத்தை துவக்க வேண்டும். எப்போதுமே தேசத்துக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிறன்று வானொலியில்
ஒற்றுமை இந்தியா,பிரதமர், அழைப்பு

புதுடில்லி:''வளர்ச்சியை நோக்கி நாடு நடைபோட மக்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். மஹாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நடத்தியது போல் தற்போது நாம் இந்தியாவை ஒருங்கிணைப்போம்' இயக்கத்தை துவக்க வேண்டும். எப்போதுமே தேசத்துக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிறன்று வானொலியில் 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த மாதத்தின் கடைசி ஞாயிறான நேற்று 79-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

கார்கில் வெற்றி தினத்தை ஜூலை 26ல் கடைப்பிடித்து வருகிறோம். கார்கில் போர் நம் படை வீரர்களின் ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றை குறிக்கும். இதை ஒட்டுமொத்த உலக நாடுகள் நேரில் பார்த்துள்ளன.இந்த நாளில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.


முதலில் தேசம் தான்

ஆக., 15ம் தேதியன்று 75வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். 75ம் ஆண்டை 'அம்ரூத் மகோத்சவ்' என்ற பெயரில் கொண்டாட உள்ளோம். அம்ருத் மகோத்சவத்தை ஒட்டி நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், அதிக மக்கள் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இந்தியா வளர்ச்சியை நோக்கி நடைபோட வேண்டுமானால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1942ல் மஹாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நடத்தினார். இப்போது நாம் 'இந்தியாவை ஒருங்கிணைப்போம்' இயக்கத்தை துவக்க வேண்டும்.பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் இந்தியா ஒற்றுமையாக உள்ளதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். எப்போதும் முதலில் தேசம் தான் என்ற உணர்வுடன் செயல்படுவோம்.

மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் மன் கி பாத் நிகழ்ச்சிக்கு ஆலோசனை வழங்கும் மக்களில் 75 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்து உள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக இன்றைய தலைமுறையின் எண்ணங்களை அறிய முடிகிறது. இந்த மாதமும் 30 ஆயிரம் கருத்துகள் வந்துள்ளன. எந்த நிகழ்ச்சிக்கும் இது போன்ற ஆலோசனைகள் வந்தது இல்லை.

இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பராமரிப்பதும், பேணுவதும், நம் வாழ்க்கையில் அடங்கி உள்ளது. ஒவ்வொரு துளி மழை நீரையும் பாதுகாத்து பராமரிப்பது நம் பாரம்பரியம்.அடுத்து வரும் பண்டிகைகளுக்கு இப்போதே வாழ்த்து தெரிவிக்கிறேன். பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது நம்மை விட்டு கொரோனா செல்லவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளான முககவசம், சமூக விலகல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் பண்டிகையை கொண்டாட வேண்டும்.

மத்திய அரசு 2014ம் ஆண்டு முதல் கதராடைகளை ஊக்கப்படுத்தி வருகிறது. கதர் பொருட்களை வாங்குவதை நாட்டுக்கும் செய்யும் பணியாக கருத வேண்டும். தேசிய கைத்தறி நாள் விரைவில் வருகிறது. அனைவரும் தங்களால் முடிந்த அளவு கைத்தறி ஆடைகளை வாங்கி பிரபலப்படுத்த வேண்டும். நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.


'லைட் ஹவுஸ்'

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கின்றன. இந்த நேரத்தில், நம் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒலிம்பிக் துவக்க விழாவில் நம் வீரர்கள் தேசியக்கொடி ஏந்திச் சென்றதை பார்த்தபோது இந்த தேசமே உற்சாகம் அடைந்தது. ஒட்டு மொத்த தேசமும் ஒன்றாக இணைந்து வீரர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்த வேண்டும். ஒலிம்பிக்கில் இந்தியாவின் வெற்றி ஏற்கனவே துவங்கிவிட்டது. அனைவரும் தங்களின் அபிமான வீரர்களின் வெற்றியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

நாட்டில் சென்னை உட்பட ஆறு நகரங்களில் 'லைட் ஹவுஸ்' என்னும் தொழில்நுட்பம் வாயிலாக குறைந்த செலவில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் 1,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வாழ்வதற்குத் தயாரான வீடுகளை, 12 மாதங்களுக்குள் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இவ்வாறு பிரதமர் பேசினார்.


நீலகிரி பெண்ணுக்கு பாராட்டுநீலகிரி மாவட்டம், குன்னுார் வண்டி சோலையை சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி, 50. இவரது முயற்சியால், 'ஆம்புரிக் ஷ்' எனப்படும் ஆறு ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் 21 லட்சம் ரூபாய் செலவில் சமீபத்தில் நீலகிரியில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆம்புலன்ஸ்கள் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.

இதில், ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட முக்கிய வசதிகள் உள்ளன. நேற்று பிரதமர் மோடி, 'மன் கி- பாத்' ரேடியோ நிகழ்ச்சியில், ராதிகா சாஸ்திரியின் சமூக சேவை குறித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பிரதமர் பேசியதாவது:தமிழககத்தின் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாஸ்திரி மலைப்பகுதிகளில் நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல எளிதாக வாகன வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை துவக்கினார்.

இதற்காக அவர் நடத்தும் உணவகத்துக்கு வருபவர்களிடம் நிதிதிரட்டினார். தற்போது அங்கு ஆறு ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன. ஆம்புலன்ஸ் ஆட்டோ வில் ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டிகள் உள்ளன. நமது பணிகளுக்கு இடையே இது போன்ற சேவைகளை செய்ய வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

இது குறித்து ராதிகா சாஸ்திரி கூறியதாவது:நீலகிரி மாவட்ட கிராமங்களில் மிகவும் குறுகலான சாலைகளில், ஆட்டோ ஆம்புலன்ஸ் எளிதாக செல்ல முடிகிறது. இந்த சேவை குறித்து மன் -கி- பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு மேலும் சேவை செய்ய இது ஊக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இவரது முயற்சியால், குன்னுார் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே, ஏ.சி.டி., என்ற குழுவினர் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தானியங்கி ஆக்சிஜன் ஆலை அமைத்து உள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஒன்று சேருகிறார்கள் - வேறு வேலையாக
Rate this:
Cancel
26-ஜூலை-202119:22:35 IST Report Abuse
அப்புசாமி வெக்ளையனே வெளியேறுன்னு சொன்னது அந்தக் காலம். அமேசானே வா.... வால்மார்ட்டே வா.. ந்னு தாரை வார்க்கிறது இந்தக்காலம். இவிங்களுக்கு மொரார்ஜி தேசாயே தேவலாம். அந்நிய நிறுவனங்களுக்கு அப்பவே கல்தா குடுத்தாரு. பாரதி அன்னிக்கே பாடிட்டான். வாய்ச்சொல்லில் வீரரடி....
Rate this:
Cancel
26-ஜூலை-202117:47:42 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren PLEASE DON'T REPEAT THE SAME COMMENTS
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X