விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
லண்டன்: ‛‛தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இங்கிலாந்திடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது,'' என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு

லண்டன்: ‛‛தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இங்கிலாந்திடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது,'' என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா தெரிவித்துள்ளார்.



latest tamil news



இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது. மேலும், அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசும், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் புகலிடம் கேட்டு விஜய் மல்லையா விண்ணப்பம் செய்துள்ளதால் அதன் மீது முடிவு எடுக்கப்பட்டு பிறகு நாடு கடத்துவது குறித்து உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அப்போது விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி இங்கிலாந்து தரப்பின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

நாங்கள் சிறப்பாக வழக்குகளை நடத்தி வருகிறோம். மேலும் இங்கிலாந்திடம் இருந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக உத்தரவாதம் வந்துள்ளது. அதனால் அவர் இந்தியா கொண்டு வரப்படுவது உறுதி. இவ்வாறு ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
26-ஜூலை-202111:40:02 IST Report Abuse
raja கவலை படாதீங்க... நீரவ் மோடி வக்கீல் சொன்னது போல இந்தியாவுக்கு நாடு கடத்தினா தற்கொலை பண்ணிப்பாருன்னு உங்க வக்கீலையும் சொல்ல சொல்லுங்க...
Rate this:
Cancel
26-ஜூலை-202108:03:45 IST Report Abuse
ravi chandran உயிடுடனா அல்லது இறந்த பிறகா. சூப்பர்
Rate this:
Cancel
26-ஜூலை-202107:37:26 IST Report Abuse
அப்புசாமி நீரவ் மோடி அசகாய சூரர். பிரதமர் மோடியுடன் டாவோஸ் மாநாட்டுக்கு சென்று அங்கேருந்தே லண்டனுக்கு கம்பி நீட்டிட்டாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X