பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பயணியர் எண்ணிக்கை பஸ்சில் நாளுக்கு நாள் அதிகரிப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் சாதாரண பஸ்களில், இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வரான உடன், சாதாரண பஸ்களில் மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, சாதாரண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது இயங்கும் பஸ்களில், மூன்றில் ஒரு பங்கு பஸ்கள், சாதாரணபஸ்களாக
 இலவச பயணியர்,எண்ணிக்கை,பஸ், அதிகரிப்பு

சென்னை:தமிழகத்தில் சாதாரண பஸ்களில், இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வரான உடன், சாதாரண பஸ்களில் மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, சாதாரண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது இயங்கும் பஸ்களில், மூன்றில் ஒரு பங்கு பஸ்கள், சாதாரணபஸ்களாக இயக்கப்படுகின்றன.

இவற்றில், இம்மாதம்12ம் தேதி வரை, 367.13 லட்சம் மகளிர் பயணித்துள்ளனர். அதேபோல, 27 ஆயிரத்து 698 திருநங்கையர், 2.57 லட்சம் மாற்றுத் திறனாளிகள், 22 ஆயிரத்து 503 மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்களும் பயணித்துள்ளனர்.இவர்களுடன் 249.14 லட்சம் ஆண்கள், கட்டணம் செலுத்தி பயணித்து உள்ளனர்.மொத்தம் பயணித்த 619.33 லட்சம் பேரில், மகளிர் 59.28 சதவீதம் பேர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், பஸ்களில் வழக்கமாக வசூலான தொகையில் 20 சதவீதம் கூட வசூலாவதில்லை. அதேநேரம், இலவச பயணத்துக்கான மானியத்தை அரசு வழங்குவதாக உறுதியளித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
26-ஜூலை-202123:25:53 IST Report Abuse
C.SRIRAM கிட்ட தட்ட இதே மாதிரி தான் "TNEB" யையும் முறைகேடாக பெரும் கடனில் தள்ளினர் முன்பு (அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி குறைந்த விலையில் விநியோகித்ததன் மூலம்). வரிவருமானத்தில் எந்த அரசும் இஷ்டத்துக்கு வரி விட முடியாத படி அரசு நெறிமுறைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் .
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
26-ஜூலை-202119:14:40 IST Report Abuse
 Madhu தற்போது, அதாவது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொண்டபின்பு, மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் என நடைமுறைப்படுத்தப் பட்ட பின்பு, அனைத்து டவுன் பஸ்களிலும் சிறுமிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை ‍ பெண்கள்தான் அதிகம் காணப்படுகிறார்கள். இன்று காலை நான் லால்குடியிலிருந்து டவுன் பஸ் மூலம் டோல்கேட் வந்து அங்கிருந்து வேறு ஒரு பேருந்து மூலம் குணசீலம் கோவிலுக்கு பயணம் செய்த போது, மொத்தமே 6 ஆண்கள்தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிப் பயணம் செய்தோம். மற்ற பயணிகள் அனைவரும் பெண்கள். பேருந்து கிளம்பும் போதே நல்ல வேளையாக எனக்கு ஜன்னல் ஓர 'சீட்' கிடைத்தது. நடத்துனருக்கு இலவச டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேலை மட்டுமே பணம் வாங்க வேண்டாம். போகப் போக அனைத்து நிறுத்தங்களிலும் பெருவாரியாகத் தாய்மார்களே பேருந்துக்குள் ஏறினார்கள். நின்றபடியே பயணித்த பெண்களுக்கிடையே கூட்ட நெரிசல் காரணமாக தோன்றிய வாக்குவாதம் சற்று வித்தியாசமாக இருந்தது. டோல்கேட்டிலிருந்து குணசீலம் வழியாக செல்லும் முசிறி (தனியார்) பஸ்ஸில் ஏறினேன். மொத்தம் குழந்தைகள் உட்பட பெண்கள் எட்டு பேர் மட்டுமே. மற்ற அனைவரும் ஆண்கள். ஒரு வயதான மூதாட்டி நடத்துனரிடம், 'நான் நேத்து வந்த பஸ்ஸில் டிக்கெட்டுக்கு பணம் வேண்டாம்னுட்டாங்க.. நீங்க என்னடான்னா இப்ப காசு கொடுத்து டிக்கெட் வாங்க சொல்றீங்க '.. எனக் கேட்டாரே பார்க்கலாம். பக்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.. 'பாட்டி அது டவுன் பஸ்' என்று அவருக்குப் புரிய வைக்க வேண்டியதாயிற்று. இனி ஆண்களுக்கு மட்டும் (கட்டணத்துடன்) எனத் தனியாகப் பேருந்துகள் அதிகம் விட்டால் தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு ஏதாவது வருமானம் கிடைக்கலாம். இல்லையேல், விரைவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு மூடு விழா நடத்த வேண்டியதுதான்.
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
26-ஜூலை-202120:27:44 IST Report Abuse
அம்பி ஐயர்நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு டவுன் பஸ்ஸிலேயே பயணம் செய்து சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்கு டவுன் பஸ்ஸிலேயே திரும்பியிருப்பேன்.....ஹும்.... என்னத்தப் பண்றது....??? இதே போல இந்தியா முழுவதும் அரசு டவுன் பஸ்களில் இலவசப் பயணம் என அறிவிக்கலாம்..... இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்........
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
26-ஜூலை-202117:59:47 IST Report Abuse
Poongavoor Raghupathy ஓசியில் பஸ் பயணம் பெண்களுக்கு. ஓசியில் ஆட்சி பயணம் திமுகவிற்கு. தலைக்குமேலே உள்ள கடன் பயணம் மக்களுக்கு, கடன் சுமையில் மக்கள் நெசுங்கிப்போவது உறுதி. ஒரே வழி நிவர்த்திக்கு திராவிட கட்சிகள் ஆட்சியிலிருந்து வெளியேற்ற பட வேண்டும் நல்ல பிஜேபி மாதிரியான தலைமை வந்தால்தான் விடியல் தமிழ்நாட்டுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X