அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம் திட்டம்: விரைவில் துவக்குகிறார் முதல்வர்!

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை சைதாப்பேட்டையில், தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் தான் உடனடி தேவை. அ.தி.மு.க., ஆட்சியில்
 மக்களை தேடி, மருத்துவம், திட்டம்,விரைவில், துவக்குகிறார் முதல்வர்!

சென்னை:''தமிழகத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில், தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் தான் உடனடி தேவை. அ.தி.மு.க., ஆட்சியில் தரமற்ற முக கவசங்கள் வழங்கப்பட்டன. மக்களுக்கு, 'என் - 95' வகை முக கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் முன்மாதிரியானது. இதை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார். இதற்காக ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு செல்கிறேன். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, சி.எஸ்.ஆர்., என்ற சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மருத்துவமனையுடன் இணைந்து, இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தொற்று பரவாத வகையில், கோவையில் உள்ள 13 எல்லை பகுதியிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப் பட்டுள்ளது.

சார்பாட்டா திரைப்படத்தில் விடுபட்ட காட்சி என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பாக்சிங் செய்வது போல ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. சார்பாட்டா படத்தில் வரும் 'டான்சிங் ரோஸ்' தான் ஜெயகுமார் என, சமூக வலைதளங்களில் கிண்டல்கள் பரவுகின்றன.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SKANDH - Chennai,இந்தியா
26-ஜூலை-202118:48:57 IST Report Abuse
SKANDH இவரது எல்லாமே போய் பித்தலாட்டம் தான்.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
26-ஜூலை-202111:45:23 IST Report Abuse
ram அடுத்த தலைப்பு செய்திகள், நீட், ஆயிரம் ரூபாய், மாதாந்திர எலக்ட்ரிசிட்டி ரீடிங் எல்லாம் ஓவர், இப்போது இது......
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-ஜூலை-202111:35:26 IST Report Abuse
elakkumanan இப்பிடியே உங்க ஆட்சி, தொடர்ந்தால், மக்கள் எல்லாரும் ஊரை விட்டு ஓடிடுவான்..............அப்பொறம், மக்களை தேடி...தேடி... தேடி........... தேடிகிட்டே இருக்க வேண்டியதுதான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X