மக்களை தேடி மருத்துவம் திட்டம்: விரைவில் துவக்குகிறார் முதல்வர்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம் திட்டம்: விரைவில் துவக்குகிறார் முதல்வர்!

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (12)
Share
சென்னை:''தமிழகத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை சைதாப்பேட்டையில், தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் தான் உடனடி தேவை. அ.தி.மு.க., ஆட்சியில்
 மக்களை தேடி, மருத்துவம், திட்டம்,விரைவில், துவக்குகிறார் முதல்வர்!

சென்னை:''தமிழகத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில், தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் தான் உடனடி தேவை. அ.தி.மு.க., ஆட்சியில் தரமற்ற முக கவசங்கள் வழங்கப்பட்டன. மக்களுக்கு, 'என் - 95' வகை முக கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் முன்மாதிரியானது. இதை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார். இதற்காக ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு செல்கிறேன். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, சி.எஸ்.ஆர்., என்ற சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மருத்துவமனையுடன் இணைந்து, இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தொற்று பரவாத வகையில், கோவையில் உள்ள 13 எல்லை பகுதியிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப் பட்டுள்ளது.

சார்பாட்டா திரைப்படத்தில் விடுபட்ட காட்சி என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பாக்சிங் செய்வது போல ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. சார்பாட்டா படத்தில் வரும் 'டான்சிங் ரோஸ்' தான் ஜெயகுமார் என, சமூக வலைதளங்களில் கிண்டல்கள் பரவுகின்றன.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X