பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண தொகை, மளிகை தொகுப்பு ரேஷனில் வாங்க அவகாசம் நீட்டிப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகளை பெறுவதற்கான அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், அரிசி ரேஷன் கார்டு தாரரர்களுக்கு மே 15 முதல், 2,000 ரூபாய்; ஜூன் 15 முதல், 2,000 ரூபாய் என, மொத்தம் 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதுமட்டுமின்றி, 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு, ஜூன் 15 முதல்
 நிவாரண தொகை, மளிகை தொகுப்பு , ரேஷனில் வாங்க அவகாசம் ,நீட்டிப்பு

சென்னை:ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகளை பெறுவதற்கான அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், அரிசி ரேஷன் கார்டு தாரரர்களுக்கு மே 15 முதல், 2,000 ரூபாய்; ஜூன் 15 முதல், 2,000 ரூபாய் என, மொத்தம் 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதுமட்டுமின்றி, 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு, ஜூன் 15 முதல் வழங்கப்படுகிறது. இதுவரை 99 சதவீத ரேஷன் கார்டுதாரர்கள், நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகளை பெற்றுள்ளனர்.

இவற்றை பெறாதவர்கள், வரும் 31ம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.இந்த காலத்திற்குள் பெற முடியாத, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள், ஆக., 1 முதல், மாவட்ட வழங்கல் அலுவலர் வாயிலாக ரேஷன் கடைகளுக்கு தகவல் தெரிவித்து, அதன்பின் நிவாரண தொகை மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

மே 10 முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த மூன்று லட்சம் பேருக்கு, ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், ஆக., 1 முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் நிவாரண நிதி மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ள, தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூலை-202121:48:39 IST Report Abuse
சி ரதி நான் கடந்த 24.03.2020 அன்று மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பித்து ஜூன் 2020 அப்ரூவல் ஆனது தான் இன்று வரை கிடைக்கவில்லை,ஆனால் ஜனவரி 2021 இருந்து பொருட்கள் எல்லாம் வாங்குகிறேன்.ஆனால் மின்னணு குடும்ப அட்டை கிடைக்கவில்லை,இடையில் கார்டு வழங்கப்பட்டதாக கடதம் வந்தது,நேரில் போய் கேட்ட போது தேர்தல் அறிவிப்பு வந்து விட்டதால் அலுவலகத்தில் உள்ளே சென்று கேட்கவிடவில்லை,மே மாதம் போய் கேட்டால் தேடி பார்த்துவிட்டு காணவில்லை என்று சொன்னார்கள்,பிறகு நகலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தியதால் கடந்த 21.06.2021 அன்று விண்ணப்பித்தேன்.இன்று வரை அப்ரூவல் நிலைமையில் தான் உள்ளது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-ஜூலை-202110:08:59 IST Report Abuse
duruvasar உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் அதற்க்கு முன்பு எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். கடன் சுமை இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூகநீதியை காக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X