நிவாரண தொகை, மளிகை தொகுப்பு ரேஷனில் வாங்க அவகாசம் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண தொகை, மளிகை தொகுப்பு ரேஷனில் வாங்க அவகாசம் நீட்டிப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை:ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகளை பெறுவதற்கான அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், அரிசி ரேஷன் கார்டு தாரரர்களுக்கு மே 15 முதல், 2,000 ரூபாய்; ஜூன் 15 முதல், 2,000 ரூபாய் என, மொத்தம் 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதுமட்டுமின்றி, 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு, ஜூன் 15 முதல்
 நிவாரண தொகை, மளிகை தொகுப்பு , ரேஷனில் வாங்க அவகாசம் ,நீட்டிப்பு

சென்னை:ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகளை பெறுவதற்கான அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், அரிசி ரேஷன் கார்டு தாரரர்களுக்கு மே 15 முதல், 2,000 ரூபாய்; ஜூன் 15 முதல், 2,000 ரூபாய் என, மொத்தம் 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதுமட்டுமின்றி, 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு, ஜூன் 15 முதல் வழங்கப்படுகிறது. இதுவரை 99 சதவீத ரேஷன் கார்டுதாரர்கள், நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகளை பெற்றுள்ளனர்.

இவற்றை பெறாதவர்கள், வரும் 31ம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.இந்த காலத்திற்குள் பெற முடியாத, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள், ஆக., 1 முதல், மாவட்ட வழங்கல் அலுவலர் வாயிலாக ரேஷன் கடைகளுக்கு தகவல் தெரிவித்து, அதன்பின் நிவாரண தொகை மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

மே 10 முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த மூன்று லட்சம் பேருக்கு, ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், ஆக., 1 முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் நிவாரண நிதி மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ள, தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X