30 நொடிகள் மட்டும் முகக்கவசத்தை கழட்டலாம்: ஒலிம்பிக் கமிட்டியின் புதிய விதி

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 25, 2021
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பானில் கோவிட் தொற்று கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், போட்டிகள் தவிர்த்து பிற நேரங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், பதக்கம் பெறும் போது புகைப்படத்திற்காக 30 நொடிகள் மட்டும் முகக்கவசத்தை கழட்டலாம்” என புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அஞ்சும் ஜப்பானியர்2020-ல் திட்டமிடப்பட்ட

டோக்கியோ: ஜப்பானில் கோவிட் தொற்று கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், போட்டிகள் தவிர்த்து பிற நேரங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், பதக்கம் பெறும் போது புகைப்படத்திற்காக 30 நொடிகள் மட்டும் முகக்கவசத்தை கழட்டலாம்” என புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.



latest tamil news





அஞ்சும் ஜப்பானியர்



2020-ல் திட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் கோவிட்டால் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23-ல் கோலாகலமாக துவங்கியது. இருப்பினும் ஒலிம்பிக் போட்டிகளால் தங்கள் நாட்டில் கோவிட் நிலைமை மோசமாகும் என ஜப்பானியர்கள் பலர் அஞ்சுகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் வாயிலாக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர். அதனால் ஒலிம்பிக் தீப ஓட்டம் போன்றவற்றை காணொளி காட்சி நிகழ்ச்சிகளாக மாற்றியது போட்டிக் குழு. தற்போதைய போட்டிகளும் பெரும்பாலும் பார்வையாளர்களின்றி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது முகக்கவசம் அணிவது பற்றிய புதிய விதியை கொண்டு வந்துள்ளனர். அதன்படி விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் விளையாட்டு நடைபெறும் இடத்திலும் சரி, வெளியேயும் சரி முக்கவசத்தை கழட்டக்கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளனர். விளையாட்டு வீரர்கள் தங்கள் போட்டிகளின் போது மட்டும் முகக்கவசம் அணிவதில் விலக்கு உண்டு. மற்றபடி பதக்கம் வாங்கும் போது கூட முக்கவசம் கட்டாயம் என கூறியுள்ளனர். புகைப்படத்திற்காக மட்டும் 30 நொடிகள் கழட்ட அனுமதித்துள்ளனர்.


latest tamil news



இது பற்றி பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், “முகக்கவசம் அணிந்திருப்பது நன்றாக இருக்காது தான், இருந்தாலும் அணிய வேண்டியது அவசியமாகிறது. அதில் யாருக்கும் தளர்வில்லை. அனைவரையும் விதிகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம். இது விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், நமது ஜப்பானிய நண்பர்களுக்கும் முக்கியமானது.” என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X