பொது செய்தி

இந்தியா

பள்ளிகளுக்கு 50 சதவீத வருவாய் இழப்பு: தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முழுதும் தனியார் பள்ளிகளுக்கு 20 - 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இரண்டாவது அலைகொரோனா வைரஸ் பரவலால் கடந்தாண்டு மார்ச்சில் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் கடந்தாண்டு அக்டோபரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இரண்டாவது அலையால் மீண்டும்
 பள்ளிகளுக்கு ,50 சதவீத வருவாய், இழப்பு,தனியார் அமைப்பு நடத்திய ,ஆய்வில், தகவல்

புதுடில்லி:கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முழுதும் தனியார் பள்ளிகளுக்கு 20 - 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இரண்டாவது அலைகொரோனா வைரஸ் பரவலால் கடந்தாண்டு மார்ச்சில் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் கடந்தாண்டு அக்டோபரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இரண்டாவது அலையால் மீண்டும் மூடப்பட்டுள்ளன.ஒன்றரை ஆண்டுகளாக பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறப்படவில்லை.

இந்நிலையில், 'சென்ட்ரல் ஸ்கொயர் பவுண்டேஷன்' என்ற, பள்ளி கல்வி தரம் குறித்து ஆய்வு செய்யும் அரசு சாரா அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் தெரிய வந்துள்ளதாவது: நாடு முழுதும் 20 மாநிலங்களில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி தனியார் பள்ளிகளுக்கு 20 - 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற செலவினங்களை குறைக்க முடியாத நிலையில் ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 55 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.இதில் 54 சதவீத ஆசிரியர்கள் வருமானத்துக்கு வேறு வழியில்லாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் 30 சதவீத ஆசிரியர்கள் 'டியூஷன்' நடத்தி குடும்பத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.


குறைக்கப்படவில்லை

நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை பெரிய அளவில் குறைந்து உள்ளதாக 55 சதவீத பள்ளி கள் தெரிவித்துள்ளன. 'நிதி நிலைமையை சமாளிக்க கடன் வாங்கும் யோசனை இல்லை' என, 77 சதவீத பள்ளிகள் கூறியுள்ளன. 3 சதவீத பள்ளிகளே, வங்கிகளில் கடன் வாங்கியுள்ளன. மேலும், 5 சதவீத பள்ளிகளின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளன.

பெற்றோரில் 70 சதவீதம் பேர் கல்விக் கட்டணம் முந்தைய ஆண்டைப் போலவே உள்ளதாகவும், குறைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். பெற்றோரில் 50 சதவீதம் பேர் மட்டுமே கல்விக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக 25 சதவீத பெற்றோர் கூறியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளால் செலவுகள் அதிகரித்துள்ளதாக பெற்றோர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baala - coimbatore,இந்தியா
27-ஜூலை-202112:15:19 IST Report Abuse
baala கொள்ளை அடிக்கும்போது யாரும் எதையும் சொல்லுவதில்லை
Rate this:
Cancel
Sivakumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-202104:17:15 IST Report Abuse
Sivakumar மாணவர்களின் கல்வித்திறன் கொரோனா ஊரடங்கினாள் எத்தனை சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாக கருதப்படவில்லை, ஆனால் திறக்காத பள்ளிகளின் Online வகுப்புகள் நடத்துகிறோம் என்ற போர்வையில் பெற்றோரிடம் நூறு சதவிகிதத்திற்குமேல் கட்டாய வசூல் செய்யும் தனியார் பள்ளிகளின் வருமானத்தைப்பற்றி பெரிய செய்தியாக பரப்புகின்றனர் (உண்மையில் ஒன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட் போன் இன்டர்நெட் டேட்டா எல்லாவற்றயும் ஏற்றுக்கொள்ளவேண்டியது 100% வசூலித்த தொகையிலிருந்துதான் 'behalf of class room rent as we paid' ஆனால் பெற்றோர்களுக்கு மேலும் இந்த செலவுகள் ஒரு சுமையாகிக்கொண்டிருக்கிறது / அதே நேரத்தில் மாணவர்களின் கண்காணிப்பும் பெற்றோர்களின்மீது சுமக்கப்படுகிறது இதில் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு புரிகிறதென்பது ஆசிரியர்களின் பாராட்டு / மதிப்பெண் மூலம் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்)
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
26-ஜூலை-202117:15:11 IST Report Abuse
Prakash கல்வி என்பது சேவை வியாபாரம் இல்லை வருமானம் பார்க்க . பள்ளியை அரசிடம் கொடுத்துவிட்டு வேறு தொழிலை பார்க்கலாமே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X