டில்லியில் முருகனுக்கு பெரிய பங்களா ஒதுக்கீடு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : தமிழகத்திலிருந்து இணை அமைச்சராகியுள்ள முருகனுக்கு விரைவில் பெரிய பங்களா ஒதுக்க மேலிடத்தில் இருந்து சொல்லப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவையில் புதிதாக வந்துள்ள அமைச்சர்களுக்கு, டில்லியில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கேபினட் அமைச்சர்களுக்கு பெரிய பங்களாக்களும், இணை அமைச்சர்களுக்கு சற்று சிறிய பங்களாக்களும் ஒதுக்கப்படும்.
 டில்லி, முருகன், பெரிய பங்களா ஒதுக்கீடு

புதுடில்லி : தமிழகத்திலிருந்து இணை அமைச்சராகியுள்ள முருகனுக்கு விரைவில் பெரிய பங்களா ஒதுக்க மேலிடத்தில் இருந்து சொல்லப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் புதிதாக வந்துள்ள அமைச்சர்களுக்கு, டில்லியில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கேபினட் அமைச்சர்களுக்கு பெரிய பங்களாக்களும், இணை அமைச்சர்களுக்கு சற்று சிறிய பங்களாக்களும் ஒதுக்கப்படும். தமிழகத்திலிருந்து இணை அமைச்சராகியுள்ள முருகனுக்கு விரைவில் பங்களா ஒதுக்கப்பட உள்ளது. இவர் நிலையில் உள்ள இணை அமைச்சர்களுக்கு சாதாரண பங்களா தான் ஒதுக்கப்படும்.

ஆனால், முருகனுக்கு 'டைப் - 8' என்ற பெரிய பங்களாவை ஒதுக்கும்படி மேலிடத்திலிருந்து சொல்லப்பட்டு உள்ளதாம்.இந்த வீட்டின் பின்புறம் பிரமாண்ட தோட்டமும் உள்ளது. இங்கு, பல அமைச்சர்கள் காய்கறி தோட்டம் போட்டுள்ளனர்.வீட்டின் முன்புறம் அலுவலகமும் உண்டு. இங்கு மயில்களும் வரும். வேல் யாத்திரை நடத்திய முருகன், இனி முருகப்பெருமானின் வாகனமான மயிலை அடிக்கடி தன் பங்களாவிலேயே பார்க்கலாம். இன்னொரு விஷயம், முருகனுக்கு ஒதுக்கப்பட உள்ள பங்களா, டில்லியின் சப்தர்ஜங் சாலையில் பிரதமரின் வீட்டிற்கு அருகே உள்ளதாம்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
28-ஜூலை-202117:56:48 IST Report Abuse
E. RAJAVELU தேவையில்லாத உதவாத .. எங்கே இருந்தால் என்ன?
Rate this:
சுள்ளான் - பாலக்கோடு,இந்தியா
29-ஜூலை-202101:25:00 IST Report Abuse
சுள்ளான்எரிச்சலுக்கு பர்னால் உபயோகித்துப்பாருங்களேன்? ஓ இது வவுத்தெரிச்சலா? அப்போ ஒண்ணும் செய்யமுடியாது....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூலை-202105:12:38 IST Report Abuse
meenakshisundaram திருமா கவனிக்க உன் வீடு இதை விட சின்னதா ?இல்லே பெருசா ?
Rate this:
Cancel
sridhran.r - Madurai,இந்தியா
26-ஜூலை-202119:31:38 IST Report Abuse
sridhran.r He is a Good leader, So appreciate from head is really good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X