கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் ?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து, எடியூரப்பா இன்று விலக உள்ளார். 'பா.ஜ., தலைமை உத்தரவிட்ட உடன், பதவியை ராஜினாமா செய்வேன்' என்று, அவர் கூறியுள்ளதால், எடியூரப்பாவுக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதிலும், கட்சியின் மூத்த தலைவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, 78, தலைமையிலான பா.ஜ., அரசு, 2019 ஜூலை 26ல் அமைந்தது. இன்றுடன்
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து இன்று எடியூரப்பா விலகுகிறார்?

பெங்களூரு:கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து, எடியூரப்பா இன்று விலக உள்ளார். 'பா.ஜ., தலைமை உத்தரவிட்ட உடன், பதவியை ராஜினாமா செய்வேன்' என்று, அவர் கூறியுள்ளதால், எடியூரப்பாவுக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதிலும், கட்சியின் மூத்த தலைவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, 78, தலைமையிலான பா.ஜ., அரசு, 2019 ஜூலை 26ல் அமைந்தது. இன்றுடன் அவரது தலைமையிலான ஆட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.பா.ஜ.,வை பொறுத்தவரை, 75 வயதானவர்களுக்கு கட்சி மற்றும் ஆட்சியில் பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை.


எதிர்பார்ப்பு

அந்த வகையில், எடியூரப்பாவுக்கு 78 வயதாவதால், அவரின் வயதை காரணம் காட்டி, பதவியிலிருந்து இறக்குவதற்கு பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான யூகச் செய்திகள், கடந்த சில மாதங்களாகவே வெளியாகி வருகின்றன.இரண்டாண்டுகளுக்கு முன், அவர் முதல்வரான போது, 'இந்தப் பதவியில் இரண்டு ஆண்டு நீடியுங்கள். அதன் பின், தகுதி வாய்ந்த வேறொருவருக்கு மாற்றி வழங்க வேண்டும்' என, கட்சி மேலிடம் அவரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனால், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலமாக ஏற்பட்டுள்ளது.அதற்கேற்ப அவர், கடந்த சில நாட்களாக, பதவியை விட்டு ஓய்வுபெறப் போவதாக அரசல்புரசலாக கூறி வருகிறார். அது குறித்து பேசும் போது, அவர் குரல் கம்மி, கண்ணீர் உகுத்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால், கர்நாடக மாநில லிங்காயத் மடாதிபதிகள், 'எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து இறங்கக் கூடாது; அவ்வாறு இறங்கினால், பா.ஜ.,வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது போலாகி விடும்' என, எச்சரித்து வருகின்றனர்.


நெருக்கடி

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பே, ராஜினாமா செய்ய அவர் திட்டமிட்டதாக, இரண்டு நாட்களுக்கு முன் அவரே பகிரங்கமாக தெரிவித்துஇருந்தார்.சில பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும், அவரை பதவியிலிருந்து இறக்குவதற்கு கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து நெருக்கடி கொடுத்து வந்த போது, பதவியை ராஜினாமா செய்வது குறித்து, எடியூரப்பா அவ்வாறு கூறி இருந்தார்.இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், எடியூரப்பா கூறியதாவது:

பா.ஜ., தலைமை அனைத்து பதவிகளையும் எனக்கு தந்துள்ளது. கட்சி கொள்கையை மீறியும், எனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.எனவே, கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். ராஜினாமா செய்யச் சொன்னால், பதவியிலிருந்து விலகுவேன். நீங்களே முதல்வராக இருக்கும்படி கூறினால் தொடருவேன்.


குறிக்கோள்இரண்டு ஆண்டுகள் நான் செய்த பணிகள் மன நிறைவை தந்துள்ளன. பதவி விலகும்படி கூறினால், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை பலப்படுத்துவேன். அடுத்த சட்டசபை தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்றி, பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதே என் குறிக்கோள். அடுத்த லோக்சபா தேர்தலிலும், கர்நாடகாவிலிருந்து அதிக எம்.பி.,க்கள் தேர்வு செய்ய உழைப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், பா.ஜ., தலைமை என்ன உத்தரவு போடும் என்று முதல்வர் எடியூரப்பா உட்பட கர்நாடக அரசியல்வாதிகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


மேலிடம் முன்வராது

மாநிலத்தில் 2023ல் சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க, பா.ஜ., மேலிடம் முன்வராது என்ற பேச்சும் அடிபடுகிறது. ஒருவேளை அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், பொதுச் செயலர் சி.டி.ரவி, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.கர்நாடக சட்டசபை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, அமைச்சர் முருகேஷ் நிரானி, எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் ஆகியோரில் ஒருவர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூலை-202119:15:33 IST Report Abuse
K.R PREM KUMAR Sidharmaiah, a power hungry politician in Karnataka, first challenged the BJP whether it could nominate anyone from schedule caste as CM. After seeing the developments in BJP and from other sections, he understood that was not possible. Hence now he says instead of changing the CM, the entire government is to be ousted. He is planning again to become as CM in a wrong route, again with the help of JDS. One thing he must accept the people of Karnataka had very bad experience of both these parties when they formed coalition government and made ugly dramas in the State.The poor, an uncontrollable Kumaraswamy, another power hungry politician, without shame, even cried openly in front of public and media, telling he was unable to bear the torture of Congressmen both inside and outside the government. Hence he should wait till next election which is due only in 2023 and now allow BJP to continue to run the State under a new CM to complete its full term. He or any other leaders either in his party or in JDS can think about becoming CM only if people support them in 2023 election.HOWEVER, AS ON DATE, THE ANSWER ABOUT PUBLIC SUPPORT TO THEM IS, DOUBLE NO NO.
Rate this:
Cancel
R M Reddy - Hyderabad,இந்தியா
26-ஜூலை-202117:36:16 IST Report Abuse
R M Reddy அவரை தி மு க வில் சேர்த்து கொள்ளலாம்..
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
26-ஜூலை-202114:35:03 IST Report Abuse
Mithun தேஜஸ்வி சூர்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X