அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீர்செல்வம்., - பழனிசாமி., டில்லி பயணம்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் திடீரென, தனித்தனியாக டில்லிக்கு பறந்தனர். பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்து பேச உள்ளனர்.சட்டசபை தேர்தலுக்கு பின், பிரதமர் மோடியை சந்தித்து பேச அனுமதி கேட்டு, பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாக இரண்டு, மூன்று கடிதங்கள் அனுப்பினர். அப்போது, அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
பன்னீர்செல்வம், - பழனிசாமி, டில்லி பயணம்

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் திடீரென, தனித்தனியாக டில்லிக்கு பறந்தனர். பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்து பேச உள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு பின், பிரதமர் மோடியை சந்தித்து பேச அனுமதி கேட்டு, பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாக இரண்டு, மூன்று கடிதங்கள் அனுப்பினர். அப்போது, அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. தற்போது, அவர்கள் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.இதையடுத்து, நேற்று காலை பன்னீர்செல்வம்., திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். நேற்றிரவு பழனிசாமி., மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, தளவாய்சுந்தரம் ஆகியோர் டில்லிக்கு பறந்தனர்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் முடிந்த பின், மத்தியில் புதியதாக ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதில், அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத்திற்கு இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரிடம், இன்று சந்திக்கும் போது பன்னீர்செல்வம்., வலியுறுத்த உள்ளார்.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை பழனிசாமி., சந்திக்கும் போது, 'சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க வற்புறுத்தக் கூடாது' என்ற கோரிக்கையை முன்வைக்க வாய்ப்புள்ளது.

உள்ளாட்சி தேர்தலில், தமிழக பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டாம்; அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும். 'நீட்' தேர்வு விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை, அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து முறியடிக்க வேண்டும்.மத்திய அரசை, ஒன்றிய அரசு என தொடர்ந்து அழைத்து வரும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொடர்ந்து, மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வாயிலாக சோதனை நடத்தி, வழக்கு தொடுக்க நினைக்கும் தி.மு.க., அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.அ.தி.மு.க.,வினர் மீது பழிவாங்கும் நோக்குடன் தி.மு.க., அரசால் தொடுக்கப்படுகிற வழக்குகளை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்த வேண்டும்.இது போன்ற சில முக்கிய கோரிக்கைகளை, டில்லி பா.ஜ., மேலிட தலைவர்களிடம், பன்னீர்செல்வம்., - பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-ஜூலை-202113:56:44 IST Report Abuse
Dhurvesh எப்படியும் கட்சியை ஒரு நல்லவிலைக்கு விற்பதற்கான பேரம் நடக்கும். குறைந்த பட்சம் நல்ல விலைக்கு அடமானம் வைத்துவிட்டுதான் திரும்புவார்கள் நம்ம வியாபாரிகள்.தொண்டர்கள் பாவம்.
Rate this:
Cancel
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
26-ஜூலை-202112:05:02 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் இவை எதுவும் காரணமாக தெரியவில்லை. முன்னாள் அ தி மு க அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் டெல்லியில் இருப்பவர்கள் பாத்துக்கொள்ள வேண்டுமென்று , தேர்தலுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாக செய்திகள் வெளி வந்தன. ஆனால், இப்போது நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில் அது பற்றி பேசவே இருவரும், சகாக்களுடன் செல்கிறார்கள் போல.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-ஜூலை-202112:04:34 IST Report Abuse
Dhurvesh ஆட்சியில் இருந்தபோது ஆட்சியை தக்கவைக்க டெல்லி சென்றார்கள் இப்போது சசிகலா அதிமுகாவை கைப்பற்றிவிடக்கூடாது என்று டெல்லி செல்கிறார்கள் மக்கள் நலனுக்காக எப்போதும் டெல்லி சென்ற தில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X