முருகனுக்கு பெரிய பங்களா

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மத்திய அமைச்சரவையில் புதிதாக வந்துள்ள அமைச்சர்களுக்கு, டில்லியில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கேபினட் அமைச்சர்களுக்கு பெரிய பங்களாக்களும், இணை அமைச்சர்களுக்கு சற்று சிறிய பங்களாக்களும் ஒதுக்கப்படும். தமிழகத்திலிருந்து இணை அமைச்சராகியுள்ள முருகனுக்கு விரைவில் பங்களா ஒதுக்கப்பட உள்ளது. இவர் நிலையில் உள்ள இணை அமைச்சர்களுக்கு சாதாரண பங்களா தான்
 டில்லி உஷ்!

மத்திய அமைச்சரவையில் புதிதாக வந்துள்ள அமைச்சர்களுக்கு, டில்லியில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கேபினட் அமைச்சர்களுக்கு பெரிய பங்களாக்களும், இணை அமைச்சர்களுக்கு சற்று சிறிய பங்களாக்களும் ஒதுக்கப்படும். தமிழகத்திலிருந்து இணை அமைச்சராகியுள்ள முருகனுக்கு விரைவில் பங்களா ஒதுக்கப்பட உள்ளது. இவர் நிலையில் உள்ள இணை அமைச்சர்களுக்கு சாதாரண பங்களா தான் ஒதுக்கப்படும். ஆனால், முருகனுக்கு 'டைப் - 8' என்ற பெரிய பங்களாவை ஒதுக்கும்படி மேலிடத்திலிருந்து சொல்லப்பட்டு உள்ளதாம்.இந்த வீட்டின் பின்புறம் பிரமாண்ட தோட்டமும் உள்ளது. இங்கு, பல அமைச்சர்கள் காய்கறி தோட்டம் போட்டுள்ளனர்.வீட்டின் முன்புறம் அலுவலகமும் உண்டு. இங்கு மயில்களும் வரும். வேல் யாத்திரை நடத்திய முருகன், இனி முருகப்பெருமானின் வாகனமான மயிலை அடிக்கடி தன் பங்களாவிலேயே பார்க்கலாம். இன்னொரு விஷயம், முருகனுக்கு ஒதுக்கப்பட உள்ள பங்களா, டில்லியின் சப்தர்ஜங் சாலையில் பிரதமரின் வீட்டிற்கு அருகே உள்ளதாம்.


ஜனாதிபதியின் ஆசை


சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி பேசினாராம் ஜனாதிபதி.'உங்கள் தந்தையின் எழுத்துக்களைப் பற்றி பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். தலித் மக்களுக்கு அதிக அளவில் உதவியிருக்கிறாராமே. அவர் எழுதிய புத்தகங்களை படிக்க விரும்புகிறேன்' என சொன்னாராம் ஜனாதிபதி.'கருணாநிதி எழுதிய புத்தகங்கள் தமிழில் தான் உள்ளன; ஆங்கிலத்தில் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்' என, முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் ஜனாதிபதி. உடனே டி.ஆர். பாலு மற்றும் சிவாவிடம், 'கருணாநிதியின் புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறதா என தேடுங்கள்; கிடைத்தால் உடனே ஜனாதிபதியிடம் கொடுத்து விடுங்கள்' என உத்தரவிட்டாராம் முதல்வர்.எப்படியோ தேடி கருணாநிதியின் கட்டுரைகள் அடங்கிய ஆங்கில புத்தகத்தைக் கண்டுபிடித்துள்ளனர் சிவாவும், பாலுவும். இந்த புத்தகம் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் நன்றி தெரிவித்தாராம்.


வாஜ்பாயின் அறை யாருக்கு?


தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தார். அப்போது பார்லிமென்டில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது. பார்லி.,யில் 50க்கும் மேலான அறைகள் உள்ளன. அதில் மிகவும் பெரியது வாஜ்பாய்க்கு ஒதுக்கப்பட்ட அறை. வாஜ்பாய்க்குப் பின் அத்வானி எம்.பி.,யாக இருந்த போது இந்த அறையை உபயோகித்தார். வாஜ்பாயின் அறை என மிகவும் மரியாதையாக சொல்லப்பட்ட இதை, தற்போது பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, நட்டா மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதற்கு இது சான்று என்கின்றனர் பா.ஜ., மூத்த தலைவர்கள்.


எங்கே செந்தமிழ் விருதுகள்?


'தமிழ் அறிஞர்களுக்கு செந்தமிழ் விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும்' என 2015ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த விருதுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. யாருக்கு இந்த விருதுகளை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, பிரதமர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.'தன் பேச்சில் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசும் மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள், ஏன் இதுவரை வழங்கப்படவே இல்லை' என கேள்விகள் எழுந்து உள்ளன.இந்த விஷயம் தெரிந்ததும் மிகவும் கோபப்பட்டாராம் மோடி. 'ஏன் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என கேள்வி கேட்டுள்ளார். எனவே ஆறு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக விரைவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் இந்த விருதுகள் பெற்றவர்கள் பட்டியல் வெளியாகும் என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PALANICHAMY K.M. - singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202112:19:41 IST Report Abuse
PALANICHAMY K.M. முதலில் அப்பா அம்மா க்கு சோறு போடு
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
28-ஜூலை-202119:47:47 IST Report Abuse
Poongavoor Raghupathy MODI தலித்துகளை தூக்கி பிடிப்பது நன்கு தெரிகிறது. எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி. முருகன் வேலை எடுத்துக்கொண்டு போராடினர். மந்திரி ஆன பிறகு என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X