பாகிஸ்தானை கதறவிடும் சீனா?| Dinamalar

பாகிஸ்தானை கதறவிடும் சீனா?

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (20)
Share
பா கிஸ்தானும், சீனாவும் நெருக்கமான நட்பு நாடுகள். பாகிஸ்தானில் பல கோடி ரூபாய் திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது, பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதி யில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைக்கப்படும், தாசு நீர் மின் நிலையம். இந்த மின் நிலைய பணிக்காக, ஜூலை, 15ல், சீன பொறியாளர்கள் பஸ்சில் சென்ற போது, அந்த பஸ் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. 13 பேர்
 பாகிஸ்தானை கதறவிடும் சீனா?

பா கிஸ்தானும், சீனாவும் நெருக்கமான நட்பு நாடுகள். பாகிஸ்தானில் பல கோடி ரூபாய் திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது, பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதி யில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைக்கப்படும், தாசு நீர் மின் நிலையம். இந்த மின் நிலைய பணிக்காக, ஜூலை, 15ல், சீன பொறியாளர்கள் பஸ்சில் சென்ற போது, அந்த பஸ் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது.


13 பேர் பலிஇதில், ஒன்பது சீனர்கள் உட்பட, 13 பேர் பலியாகினர். பஸ்சில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் தான் விபத்து ஏற்பட்டது என, முதலில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி தெரிவித்தார். அதை, சீன அரசு நம்பவில்லை. முழு விசாரணை கோரியதுடன், பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றது. அத்துடன், 15பேர் விசாரணை குழுவை பாகிஸ்தானுக்கே அனுப்பி வைத்தது.அத்துடன், 4.83 லட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தி வரும், 'பெல்ட் அண்டு ரோடு' திட்டத்தின் 10வது கூட்டு ஒருங்கிணைப்பு குழுசந்திப்பை ஒத்திவைத்தது. தாசு நீர் மின் நிலைய கட்டுமானத்தையும் நிறுத்தியது.

பஸ் வெடிகுண்டு தாக்குதலை, பாக்., தலிபான்கள் செய்திருக்கலாம் என, தற்போது, சீனாவும், பாக்.,கும் நம்புகின்றன. அதனால், சீனர்களுக்கு பாகிஸ்தானில் போதிய பாதுகாப்பு இல்லை; அதை பாக்., அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சீனா வலியுறுத்துகிறது. பயங்கரவாத கும்பல்களை அடக்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தானால் அதை செய்ய முடிய வில்லை.

ஏற்கனவே, 2019 மே மாதம், சீனர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொகுசு ஓட்டல் தாக்குதலுக்கு உள்ளானது.அதேபோல, கராச்சி பங்குச் சந்தைக்குள்2020ஜூனில், துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நுழைந்து தாக்க முயன்றனர். இந்தப் பங்குச் சந்தையில், 40 சதவீத முதலீட்டை சீன குழுமம் ஒன்று செய்துள்ளது.பாகிஸ்தான் அரசை வழிக்கு கொண்டு வரவே, சீனா, தான் நிறைவேற்றிவரும் திட்டங்களை நிறுத்திவைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

சீனாவை சமாதானப்படுத்தி, மீண்டும் இணக்கமான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, சீனா சென்றுஉள்ளார்.கவலைஇந்நிலையில், இந்த பிரச்னையை கூர்ந்து கவனித்து வரும், பாதுகாப்பு வல்லுனர்கள் வேறொரு கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.தம் நாட்டு பிரஜைகளையும், திட்டங்களையும் பாதுகாப்பதற்கு, பாக்.,கில் சீனா தன் பாதுகாப்பு துருப்புகளை அதிகப்படுத்த முனையும் என்றும் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் என்பது, ஜம்மு - காஷ்மீரில் இருந்து, 420 கி.மீ., தொலைவில் இருக்கக்கூடிய பகுதி. சீனா தன் துருப்புகளை இங்கே குவிக்குமானால், அது, இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலியையே ஏற்படுத்தும் என, கருதப்படுகிறது.


பாதுகாப்புக்கு சவால்

இந்தப் பக்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஒரு தலைவலி உற்பத்தியாகிறது என்றால், அந்தப் பக்கம், அருணாசல பிரதேசத்தில், சீன அதிபரே மற்றொரு மண்டையிடிக்கு அடி போட்டுள்ளார்.

திபெத்தில் உள்ள நியிங்சி பகுதிக்கு, முதன்முறையாக சீன அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த வெள்ளியன்று பயணம் செய்தார். அங்கே நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அந்தப் பகுதி, நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்துக்கு மிக அருகில் உள்ளது.

இங்கு வந்துள்ள முதல் சீன அதிபர் இவரே. அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், ஜீ ஜின்பிங் பயணம், பயங்கர அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதே அருணாச்சல பிரதேசத்துக்கு, இந்திய பிரதமர்கள் மன்மோகன் சிங்கோ, நரேந்திர மோடியோ பயணம் செல்லும் போதெல்லாம், சீனா அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும். அது, ஏதோ பிரச்னைக்குரிய எல்லைப் பகுதி போன்றும், அதில் இந்திய தலைவர்கள் அத்துமீறி நுழைவது போன்றும் கூக்குரல் இடும்.

தற்போது, சீன அதிபரே அருணாச்சல பிரதேசத்துக்கு அருகில் வந்து சென்றிருப்பது, பாதுகாப்பு ரீதியாக நமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பாதுகாப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X