சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேகமாக கார் ஓட்டிய நடிகை யாஷிகா படுகாயம் விபத்தில் வெளியே துாக்கி வீசப்பட்ட தோழி பலி

Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், 'பார்ட்டி' முடிந்து, தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் ஆட்டம், பாட்டம், கும்மாளம் போட்டு விட்டு, மின்னல் வேகத்தில் கார் ஓட்டிய நடிகை யாஷிகா ஆனந்த், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரின் தோழி, துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.'துருவங்கள் பதினாறு; ஜாம்பி, கவலை வேண்டாம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த், 22.
 வேகமாக கார் ஓட்டிய நடிகை யாஷிகா படுகாயம் விபத்தில் வெளியே துாக்கி வீசப்பட்ட தோழி பலி

சென்னை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், 'பார்ட்டி' முடிந்து, தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் ஆட்டம், பாட்டம், கும்மாளம் போட்டு விட்டு, மின்னல் வேகத்தில் கார் ஓட்டிய நடிகை யாஷிகா ஆனந்த், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

அவரின் தோழி, துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.'துருவங்கள் பதினாறு; ஜாம்பி, கவலை வேண்டாம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த், 22. இவர், தனியார் 'டிவி' சேனல் ஒன்றில் ஒளிபரப்பான, 'பிக்பாஸ் சீசன் - 3'ல் பங்கேற்று பிரபலமானார்.கவர்ச்சி கன்னியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சூடு பறக்கும் படங்களை வெளியிட்டு, இளைஞர்களை கட்டிப்போட்டு வருகிறார்.இவர் வார விடுமுறை நாட்களில், சில நடிகர்கள், ஆண் நண்பர்களுடன், கிழக்கு கடற்கரை சாலையில், 'ஜாலி'யாக ஊர் சுற்றி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.

கும்மாளம்இரு தினங்களுக்கு முன், அமெரிக்காவில் மென்பொறியாளராக பணிபுரியும் தோழி வள்ளிசெட்டி பவானி, 28, என்பவரை சென்னைக்கு வரவழைத்துள்ளார். இவரதுதந்தை ராதாகிருஷ்ணா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் வசிக்கிறார். யாஷிகா ஆனந்த் டில்லியைச் சேர்ந்தவர். இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கிறார்.இவர்கள் இருவரும், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சையது, 21; அமீர், 19, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, யாஷிகா ஆனந்தின், 'டாடா ஹாரியர்' காரில், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் சென்றுள்ளனர்.இவர்களது கார் இரவு, 10:12க்கு கானத்துாரை கடந்துள்ளது.

நான்கு பேரும், ஆட்டம், பாட்டம் என, கும்மாளத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், காரிலேயே பார்ட்டி கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சென்னை திரும்பினர்.காரின் மேல் பகுதியில், திறக்கும் வசதியுள்ள இடத்தில் தலையை நீட்டி, கைகளை விரித்து வள்ளிசெட்டி பவானி, பலமாக சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியுள்ளார். சையது, அமீர் ஆகியோர் பின் இருக்கையில் போதையில் கிறங்கிய நிலையில் இருந்துள்ளனர்.தோழி பலிஇரவு, 11:15 மணியளவில் கார், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, சூலேரிக்காடு பகுதியில், 122 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளது. வள்ளிசெட்டி பவானி முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.காருக்குள் பாடல் அலறியது. அதற்கு ஏற்ப நான்கு பேரும் கூச்சல் போட்டபடி இருந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், யாஷிகா ஆனந்த் காரை, சாலையின் மையத்தடுப்பில் மோதினார். அப்போது, காருக்கு வெளியே துாக்கி வீசப்பட்ட வள்ளிசெட்டி பவானி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.கார், 50 தடவைக்கு மேல் உருண்டு சாலை ஓரத்தில் கிடந்தது. காருக்குள் யாஷிகா ஆனந்த், இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கிடந்தார். சையது, அமீர் ஆகியோர் பலத்த காயத்துடன் மரண பீதியில், 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என, கதறினர். சூலேரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட மூவரையும் காப்பாற்றினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் போலீசார், யாஷிகா ஆனந்த், சையது, அமீர் ஆகியோரை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பினர். முதலில் அடையாறில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பின், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வள்ளிசெட்டி பவானியின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த விபத்து குறித்து, மாமல்லபுரம் போலீசார், யாஷிகா ஆனந்த் மீது, கொலை குற்றம் ஆகாது மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அசட்டு துணிச்சலுடன் செயல்பட்டு காயம் ஏற்படுத்துதல் என, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.யாஷிகா உள்ளிட்ட நால்வரும், மது விருந்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கோவளத்திற்கு சைக்கிள் பயணம் சென்ற போது, அவருடன், 'செல்பி' எடுத்த நடிகை யாஷிகா, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-ஜூலை-202106:54:15 IST Report Abuse
Girija குடிக்க வில்லையாம்? காக்கி கூறுகிறது அப்படியே ன்றால் எப்படி போதை ?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜூலை-202105:56:24 IST Report Abuse
D.Ambujavalli இந்த 'பார்ட்டி' கலாசாரம் எத்தனை உயிர்களைக் குடிக்கப் போகிறதோ? இவர்களுக்கெல்லாம் குடித்துவிட்டு வண்டி எடுக்காதே, அதி வேகம் ஆபத்து என்று எத்தனைதான் கரடியாக கத்தினாலும் புத்திக்கு எட்டாது அம்மணி எப்படியாவது வெளிவந்துவிடுவாள் வெளிநாட்டிலிருந்து வந்து பாழாய்ப்போன பார்ட்டியால் உயிரிழந்த மகலின் பெற்றோருக்கு யார் இழப்பீடு தருவார் ?
Rate this:
Cancel
samkey - tanjore,இந்தியா
26-ஜூலை-202120:55:20 IST Report Abuse
samkey தருதலைகளுக்கு இறைவன் கொடுத்த சரியான தண்டனை மகிழ்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X