பொது செய்தி

தமிழ்நாடு

இவங்களுக்கு விடியல் தரப்போறது யாரு? 20 ஆண்டுகளாக இருளே துணை!

Added : ஜூலை 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தஞ்சாவூர்-மின்சாரம் இல்லாமல் இருளில் 20 ஆண்டுகளாக வசித்தும் வரும் நிலையில், அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர், 'டிவி'க்களை இதுவரை இயக்கி கூட பார்க்காமல், பூம்பூம் மாட்டுக்காரர்கள் தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே சமுத்திரம் பகுதியில், 30க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர் சமூக மக்கள், 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இவர்கள்
 இவங்களுக்கு விடியல் தரப்போறது யாரு?  20 ஆண்டுகளாக இருளே துணை!

தஞ்சாவூர்-மின்சாரம் இல்லாமல் இருளில் 20 ஆண்டுகளாக வசித்தும் வரும் நிலையில், அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர், 'டிவி'க்களை இதுவரை இயக்கி கூட பார்க்காமல், பூம்பூம் மாட்டுக்காரர்கள் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே சமுத்திரம் பகுதியில், 30க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர் சமூக மக்கள், 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இவர்கள் வீடுகளில் மின் சாதனங்களை பொருத்தி விட்டு, எப்படியும் அரசு மின் இணைப்பு அளித்து விடும் என்ற நம்பிக்கையில், 20 ஆண்டுகளாகஇருளில் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து, நீலகண்டன், 45 என்பவர் கூறியதாவது:பூம்பூம் மாட்டை வைத்து பிழைப்பு நடத்தி வந்த நாங்கள் காலப்போக்கில், மாடுகளை வைத்து பராமரிக்க முடியாமல் விற்று விட்டு கூலி வேலை, எலக்டிரிக்கல் வேலைக்கு சென்று வருகிறோம்.குடியிருக்கும் இடத்திற்கு பட்டா இல்லை. வீட்டிற்கு மின் இணைப்பு இல்லை.எனவே, மின் வசதி செய்து பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் உள்ளன.எங்களுக்கு இந்து ஆதியன் என்ற மலைவாழ் மக்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.ஆனால், நாங்கள் மலை பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்ததால், அப்படி சான்றிதழ் தர அதிகாரிகள் மறுக்கின்றனர்.

அதற்கு பதிலாக வெறும் இந்து ஆதியன் என சான்றிதழ் வழங்குகின்றனர். இதனால், உயர்கல்வி, அரசு வேலை பெற முடியாமல் தவித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.காமாட்சி, 40 என்பவர்கூறுகையில், ''மின் வசதி இல்லாத நிலையில், குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சிரமமாக உள்ளது.கருணாநிதி கொடுத்த, 'டிவி', ஜெயலலிதா கொடுத்த மிக்சி, கிரைண்டர் எல்லாம் ஒரு மூலையில் கிடக்கின்றன. ''அதை எல்லாம் ஒருமுறைவாது இயக்கி பார்க்க மின்சாரம் வேண்டும். இது குறித்து தாசில்தார் முதல் முதல்வர் வரை மனு அளித்தும் ஒன்றும்நடக்கவில்லை,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அந்த "விலையில்லா" மின் சாதனங்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் ஒப்படைத்தால் ஏதாவது வழி பிறக்கலாம் எல்லா அட்டையும் உள்ளது மின்சாரம் வழங்க மட்டும் என்ன தடையாக உள்ளதுன்னு உலகத்துக்கே தெரியும்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
26-ஜூலை-202111:16:05 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் எங்கு மனு செய்தாலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அரசு சேவைகள் என இறுமாந்திருக்கும் குற்றவாளிகளிடமே அனுப்பப்படும் நிலை உள்ளதால் ஒன்றும் கிடைக்காது.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-ஜூலை-202111:13:06 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan மின்சாரமே இல்லை. இலவச பொருள்களை என் வாங்க வேண்டும். தவிர எல்லா வசதியுமுள்ள பக்கத்து ஊருக்கு போகலாமே. இப்படித்தான் இங்கு பலர். இரண்டு பேர் படிக்கும் ஊருக்கு பேருந்து இல்லை என்று புலம்புவார்கள். உணவை தேட வேண்டும் . எவனாவது பிச்சை போடுவான் என்று எதிர்பார்ப்பது அழகல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X