சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உறவினர்களுக்காக கொரோனா தடுப்பூசி திருட்டு மகப்பேறு உதவியாளர் வீட்டில் 95 டோஸ் பறிமுதல்

Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வேடசந்துார்-கரூர் மருத்துவமனையில் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி திருடிய மகப்பேறு உதவியாளர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வீட்டில் வைத்து உறவினர்களுக்கு செலுத்தினார். அங்கு சோதனையிட்டு 95 டோஸ் தடுப்பூசி பறிமுதல் செய்யப்பட்டது.வேடசந்துார் அய்யனார் கோயில் அருகே வசிப்பவர் தனலட்சுமி 58. இவர் கரூரில் உள்ள கஸ்துாரிபாய் தாய்-சேய் நல மையத்தில் அரசு மகப்பேறு
 உறவினர்களுக்காக கொரோனா தடுப்பூசி திருட்டு மகப்பேறு உதவியாளர் வீட்டில் 95 டோஸ் பறிமுதல்

வேடசந்துார்-கரூர் மருத்துவமனையில் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி திருடிய மகப்பேறு உதவியாளர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வீட்டில் வைத்து உறவினர்களுக்கு செலுத்தினார். அங்கு சோதனையிட்டு 95 டோஸ் தடுப்பூசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேடசந்துார் அய்யனார் கோயில் அருகே வசிப்பவர் தனலட்சுமி 58. இவர் கரூரில் உள்ள கஸ்துாரிபாய் தாய்-சேய் நல மையத்தில் அரசு மகப்பேறு உதவியாளராக பணிபுரிகிறார். அங்கிருந்து கொரோனா தடுப்பூசிகள் திருடிய தனலட்சுமி வீட்டில் வைத்து உறவினர்களுக்கு போட்டார். புகாரின்பேரில் டாக்டர்கள் சுரேன், அருண் நேற்று தனலட்சுமியின் வீட்டில் சோதனை நடத்தி 95 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை பறிமுதல் செய்தனர்.தனலட்சுமியிடம் விசாரித்ததில் வீட்டில் இருவருக்கு போட 2 டோஸ் தடுப்பூசி கேட்டு வாங்கியதும், மற்ற தடுப்பூசிகளை திருடி வந்ததும் தெரியவந்தது.வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி கூறுகையில்,''புகாரையடுத்து நடத்திய சோதனையில் 95 டோஸ் தடுப்பூசிகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுவரை 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

திண்டுக்கல், கரூர் மருத்துவத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளோம்'' என்றார்.இந்நிலையில் தனலட்சுமியை சஸ்பெண்ட் செய்து, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''சம்பவம் குறித்து போலீசில் புகார் தரப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வெளியே சென்றது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜூலை-202104:14:37 IST Report Abuse
meenakshisundaram திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நல்லவர்கள் பிரார்த்தனை செய்வது இதற்காகத்தான் -வன்முறை.அநியாய வழியில் சம்பாதிப்பது .ஜாதி வெறியை காட்டுவது .அவரவர் லெவெலில் அதிகாரிகள் அதிகார துஷ்ப்ரயோகம் ,பெண்களுக்கெதிரான செயல்கள் பொது வாழ்வில் அமைதி இன்மையை பரப்புதல் (இவை எல்லாம் அதிமுக ஆட்சியிலே இல்லையே) ஆகியன அன்றாட செயல்களாகி விட்டன ஏனென்றால் திமுக வில் உண்மை ,உழைப்பு ,உயர்வு என்பதை தலைவர்கள் பாராட்டாது இருப்பதே .தமிழகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது.ஆம் ஆத்மிக்கு இங்கே இடம் இல்லை பயமே மிஞ்சி உள்ளது
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-ஜூலை-202111:23:05 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அறிந்த திருட்டு. ஆனால் சஸ்பெண்ட். கைது கிடையாது எப்படி. திருடியது உண்மை. கையும் களவுமாக சிக்கியுள்ள குற்றவாளியை காவல்துறை இன்னும் கைது செய்ய வில்லை. இட ஒதுக்கீடு மற்றும் சிபாரிசு என்ற பின்வாசல் வழியில் வேலைக்கு சேர்ந்திருப்பதால். வயது பாருங்கள். இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு திருடியுள்ளாளோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X