பொது செய்தி

தமிழ்நாடு

ஆக., 2ல் ஜனாதிபதி தமிழகம் வருகை:பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை-ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழகம் வரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் இறையன்பு நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.முதல்வர் ஸ்டாலின், 19ம் தேதி டில்லி சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா; சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழா; நாட்டின், 75வது சுதந்திர

சென்னை-ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழகம் வரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் இறையன்பு நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



latest tamil news



முதல்வர் ஸ்டாலின், 19ம் தேதி டில்லி சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா; சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழா; நாட்டின், 75வது சுதந்திர தின நினைவுத் துாண் அடிக்கல் நாட்டு விழா போன்றவற்றில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்ற ஜனாதிபதி, ஆக., 2ல் தமிழகம் வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடக்கவுள்ள விழாவில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.


latest tamil news



ஜனாதிபதி வருகையை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் இறையன்பு, தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
26-ஜூலை-202110:42:08 IST Report Abuse
R. Vidya Sagar ரயிலில் வருகிறாரா?
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூலை-202108:15:38 IST Report Abuse
 rajan வீண் செலவு.... மக்கள் ரேசனுக்கு அலைகிறார்கள். இவர்கள் அரசு பணத்தை விரயம் செய்கிறார்கள். சொந்த ஊருக்கு சொந்த செலவில் ரயிலில் சென்றவருக்கு இப்படி ஒரு நிலைமை.
Rate this:
Cancel
26-ஜூலை-202102:09:20 IST Report Abuse
அப்புசாமி மக்களை அடிச்சு முடக்க , போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X