பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பிய நிலையில் அமராவதி அணை: 3வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்

Added : ஜூலை 26, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அமராவதி அணை நடப்பு ஆண்டில் முதல் முறையாக நிரம்பி, 3வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, மூணாறு, தலையாறு, மறையூர், காந்தலுார் மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்கு பகுதிகள், கொடைக்கானல் மலைத்தொடரின் மேற்கு பகுதிகளில், தென் மேற்குபருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்து
 நிரம்பிய நிலையில் அமராவதி அணை: 3வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்

உடுமலை:உடுமலை அமராவதி அணை நடப்பு ஆண்டில் முதல் முறையாக நிரம்பி, 3வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, மூணாறு, தலையாறு, மறையூர், காந்தலுார் மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்கு பகுதிகள், கொடைக்கானல் மலைத்தொடரின் மேற்கு பகுதிகளில், தென் மேற்குபருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்து வருகிறது.இதனால், அமராவதி அணையின் பிரதான நீர் வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து, அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.கடந்த, 23ம் தேதி, காலை, 7:40க்கு, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 85 அடி வரை உயர்ந்தது. இதனையடுத்து, வெள்ள காலங்களில் அணை பாதுகாப்பு கருதி, அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, நீர் மட்டம், 87.2 அடியாக உயர்ந்ததையடுத்து, அணை திறக்கப்பட்டது.ஜூன் முதல் மே வரை உள்ள, நடப்பு நீர் ஆண்டில் முதல் முறையாக அணை நிரம்பியது. தொடர்ந்து மூன்று நாட்களாக அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 88.32 அடியாக இருந்தது.மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,894.96 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,260 கன அடி நீர் வரத்து காணப்பட்டது.அணையிலிருந்து, ஆற்றில், 1,800 கன அடி நீரும், பிரதான கால்வாயில், 440 கன நீர் என, 2,240 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X